நெடுவாசல் கிராம சபைக் கூட்டம் ; ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தீர்மானம்.

 

neduvaasal3

 

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசல் கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை: நெடுவாசலில் கிராம சபை கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதிகாரிகள் முன்னிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைட்ரோ கார்பன் திட்ட ஒப்பந்தத்துக்கு மத்திய அரசு கடந்த திங்கட் கிழமை ஒப்புதல் அளித்தது. இதற்கு தமிழக விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இந்நிலையில் நெடுவாசலில் கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் அரசு சார்பில் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக அதிகாரிகள் முன்னிலையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழக விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களுக்கு தமிழக அரசு அனுமதி அளிக்கக் கூடாது. ஊராட்சி பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலங்களாக அறிவிக்க வேண்டும். நெடுவாசல் பகுதியில் உள்ள ஓஎன்ஜிசி ஆழ்துளை கிணறுகளை உடனடியாக அகற்ற வேண்டும். ஆழ்துளை கிணறுகளை அகற்றி விளைநிலங்களாக மறுசீரமைத்து 3 மாதங்களில் ஒப்படைக்க வேண்டும். இந்தக் கூட்டத்தில் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக அதிகாரிகள் வருவதற்கு நீண்ட நேரம் ஆனதால் மக்கள் காத்திருந்தனர் .  அதிகாரிகள் வந்த பின்னரே கூட்டம் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top