மகப்பேறு மசோதாவில் திருத்தம் மேற்கொள்வதற்கான ஒப்புதல்;பிரணாப் முகர்ஜி.

 

pranab

 

தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் கர்ப்பிணிகளுக்கு 6 மாதம் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு மசோதாவில் திருத்தம் மேற்கொள்வதற்கான ஒப்புதலை  அளித்தார்.

தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் கர்ப்பிணிகளுக்கு நடைமுறையில் உள்ள 3 மாத மகப்பேறு விடுப்பை 6 மாதமாக மாற்றும் மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தார்.

அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண்களுக்கு 26 வாரங்கள் அல்லது 6 மாதங்கள் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தனியார் துறையில் பணியாற்றும் பெண்களுக்கு தற்போது வெறும் 12 வாரங்கள் அதாவது 3 மாதங்கள் மட்டுமே ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்கப்படுகிறது.

இதை மாற்றி 10-க்கும் மேறபட்டோர் பணிபுரியும் தனியார் நிறுவனங்களில் உள்ள மகளிருக்கும் 26 வாரங்கள் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு அளிக்கும் வகையில் மகப்பேறு ஆதாய சட்டத் திருத்த மசோதா மார்ச் 9-ஆம் தேதி லோக்சபாவிலும், மார்ச் 20-இல் ராஜ்யசபாவிலும் நிறைவேற்றப்பட்டது.அதில் 3 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை தத்தெடுக்கும் தாய்மார்களுக்கும் 12 வாரங்கள் விடுப்பு வழங்கவும் கோரப்பட்டது  12 வார காலத்துக்கு பிறகு வீட்டிலிருந்து பெண்கள் பணியாற்றும் வசதி இருக்கும் நிறுவனங்கள் அதை அனுமதிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது..

55 ஆண்டுகால பழமையான சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அந்த மசோதாவுக்கு அவர் இன்று ஒப்புதல் அளித்தார். 26 வாரங்களாக அதிகரிப்பு அதில் 12 வாரங்களாக இருந்த மகப்பேறு விடுப்பானது 26 வாரங்களாக அதிகரிக்கிறது. அந்த காலகட்டத்தில் முழு ஊதியமும் வழங்கப்பட வேண்டும்.

இந்த திட்டமானது முதல் இரு குழந்தைகளுக்கு மட்டுமே ஆகும். மேலும் 3 அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைக்கான மகப்பேறு விடுப்பு வழக்கம் போல் 12 வாரங்கள் மட்டுமே இருக்கும். இது தொடர்பாக 10-க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் தனியார் நிறுவனங்களில் பெண்கள் பணிக்கு சேரும்போது அவர்களுக்கு இதுதொடர்பாக அறிவிக்க வேண்டும்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top