இந்திய வானிலை ஆய்வு மையம் வெப்பம் குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு எச்சரிக்கை.

 

veppan

 

இந்தாண்டு கடுமையான வெப்பம் தாக்கக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தல்.
கடுமையான வெப்பத்தை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறு இந்திய வானிலை ஆய்வு மையம் மற்றும் தேசிய பேரிடர் தடுப்பு ஆணையம் ஆகியவை மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளன.

நாடு முழுவதிலுள்ள பல்வேறு மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக கடும் வெப்பம் தகித்து வருகிறது. இதனால் வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளிவர முடியாத சூழல் நிலவுகிறது.

இந்நிலையில், கடுமையான வெப்பத்தை சமாளிக்கும் வகையில் படிப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் கேட்டுக் கொண்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை விடுவதுடன், தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவும் தேசிய பேரிடர் தடுப்பு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

ஆந்திர பிரதேசம், குஜராத், தெலுங்கானா, ஒடிசா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்கனவே கடும் வெப்பத்தை எதிர்கொள்வதற்கான தன்னிச்சையாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடங்கிவிட்ட சூழலில், சில பஞ்சாயத்து அமைப்புகள் கோடை எதிர்கொள்வதற்கான முகாம்களை வானிலை ஆய்வு மையத்துடன் இணைந்து மேற்கொண்டுள்ளன.

கடும் கோடை வெப்பத்திற்கு 1992 முதல் 2015 வரையிலான காலத்தில் 22 ஆயிரத்து 562 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய பேரிடர் தடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. 2015ல் ஆந்திராவில் மட்டும் 1,422 பேர் கடுமையான வெப்பத்திற்கு உயிரிழந்ததாகவும், 2016ல் அது 723ஆக குறைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top