கோதுமை, துவரம் பருப்பு இறக்குமதி; வரி விதிப்பு.

 

ulunthu

 

கோதுமை, துவரம் பருப்பு ஆகியவற்றின் இறக்குமதிக்கு 10 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மக்களவையில் பேசிய நிதித்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், நடப்பு ஆண்டில் விளைச்சல் சாதனை அளவை எட்டும்  என மதிப்பிட்டாலும்,  உள்நாட்டு விவசாயிகளின் நலன்களை பாதுகாக்கும் வகையிலும் கோதுமை,  துவரம் பருப்பு ஆகியவற்றின் இறக்குமதிக்கு 10 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இது தொடர்பான மத்திய அரசின் அறிவிக்கை மார்ச் 17-ம் தேதி வெளியிடப்பட்டதாகவும் அவர் கூறினார். கோதுமை மற்றும் துவரம் பருப்பின் தற்போதைய இறக்குமதி நிலவரப்படி அவற்றின் இறக்குமதிக்கான வரி விதிப்பினால் மத்திய அரசுக்கு 840 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top