உ.பி.யில் பள்ளி தேர்வுகளில் தொடரும் மோசடி, ஆங்கில தேர்வு ஒத்திவைக்கப்பட்டது

உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெறும் போது மோசடி  தொடர்ந்து வருகிறது. பீகாரில் பொது தேர்வின் போது சர்வ சாதாரணமாக மாணவர்கள் புத்தகத்தை வைத்து எழுதியது, பெற்றோர்கள், உறவினர்கள், ஆசிரியர்கள் அவர்களுக்கு உதவியவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து பீகார் அரசு நடவடிக்கையை தொடங்கியது. அண்டைய மாநிலமான உத்தரபிரதேசத்திலும் கள்ளகாப்பி அடிப்பது தொடர்ந்து வருகிறது.
Uttar-Pradesh-Examinations-for-English-paper-postponed-after_SECVPF
உத்தரபிரதேச மாநிலத்தில் இப்போது 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொது தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுகளிலும் மோசடிகள் நடந்து உள்ளது தெரியவந்து உள்ளது. மோசடி தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் வெளியாகி மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேர்வு எழுதும் மையங்களில் மாணவர்களுக்கு அவர்களுடைய பெற்றோர்கள், உறவினர்கள் முறைகேடாக பிட் பேப்பர்கள் வழங்குகள், குறிப்பு வழங்குதல், புத்தகம் வழங்குதல், ஜன்னல் வழியாக பிட் பேப்பர்களை வழங்குதில் தீவிரமாக இருந்து உள்ளனர், இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.
மாணவர்கள் ஒருவரை பார்த்து ஒருவர் எழுதியதும், தேர்வு மையங்களில் இருந்து மாணவர்கள் உதவி பெற்றதும் உறுதிசெய்யப்பட்டது. இதனையடுத்து ஆங்கில தேர்வுகள் அங்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. ஆங்கில தேர்வு இனி எந்த தேதியில் நடைபெறும் என உத்தரபிரதேச அரசு அறிவிக்கவில்லை. இந்நிலையில் தேர்தலில் மோசடியை தடுக்கும் விதமாக உத்தரபிரதேச அரசு 9454457241 என்ற எண்ணை அறிவித்து உள்ளது. இதுபோன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு புகார்கள் தெரிவிக்கவும் 0522 2236760 என்ற எண்ணை தெரிவித்து உள்ளது. இதற்கிடையே மோசடியில் ஈடுபட்டதாக மாணவர்கள், ஆசிரியர்கள் பிடிபட்டு உள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டசபைத் தேர்தல் பிரசாரம் நடந்த போது பிரதமர் மோடி பேசுகையில், மாநிலத்தில் பொது தேர்வுகளில் நடைபெறும் மோசடிகளுக்கு பாரதீய ஜனதா முற்றுப்புள்ளி வைக்கும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மாநில அரசு மாவட்ட மாஜிஸ்திரேட்களுடன் பேசி, மோசடியை தடுப்பதற்கான நடவடிக்கையில் இறங்கியது, அதிலும் பலன் கிடைக்காதது இப்போது தெரியவந்து உள்ளது.

கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top