நெல்லை ம சு பல்கலைக்கழகத்தில் இயற்கை பாதுகாப்பில் மக்கள்பங்கு, மாணவர்கள்பங்கு கருத்தரங்கம்-நூல் வெளியீடு

samuel

 

நெல்லை மனோன்மனியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சமுகவியல் துறை சி.பா ஆதித்தனார் அரங்கில் இன்று ‘சுற்று சூழலும் -மக்கள் போராட்டமும்’ என்ற தலைப்பில் கருந்தரங்கம் நடைப்பெற்றது. இதில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் ஜான் பாண்டியன், எஸ்.டிபி.ஐ கட்சியின் மாவட்ட தலைவர், நெல்லை முபாரக்.மற்றும் மே பதினேழு இயக்கத்திலிருந்து அருண் குமார் தங்கராஜ் ஆகியோர் உரையாற்றினர்கள்

.mu1

இதில், இயற்கை வளபாதுகாப்பில் மக்கள் பங்கு , மாணவர்கள் பங்கு என்ற தலைப்பில் நெடுவாசல் ஹைட்ரோகார்பன் எதிரான மக்கள் போராட்டம்,

கூடங்குளம் அனுஉலை எதிர்ப்பு போராட்டம்,கோக்ககோலாக்கு எதிரான பிளாச்சிமடா மக்கள் போராட்டம் உள்ளிட்ட இயற்கை வள பாதுகாப்பிற்கான போராட்டங்களை மேற்கோள் காட்டியும் நாளைய தலைமுறைக்கான இயற்கை வளத்தை மாணவர்கள் பாதுகாக்கவேண்டும் என்றும் வற்றாத ஜீவ நதியான தாமிரபரணி சுரண்டப்படுவதை தடுக்க மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வும் எழுச்சியும் கிளர்ந்தெழவேண்டும் என்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் ஜான் பாண்டியன் கருத்துரை வழங்கினார்.

jhan1
சூழலியல் போராட்டங்களும், சூழல் பாதுகாப்பில் இஸ்லாமியர்களின் பங்களிப்பும் குறித்து பேசிய முபாரக் அவர்கள் முகமது அலி ,சலிம் அலி உள்ளிட்டவர்கள் பங்களிப்பு குறித்ததும் சம காலத்தில் தமிழகத்தில் நடை பெறும் போராடங்கள் குறித்தும் அதில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு குறித்தும் பேசினார்.

 

மே பதினேழு இயக்கத்தின் அருண் குமார் தங்கராஜ் கார்ப்ரேட் நிறுவனங்கள் எப்படி இயற்கை வளங்களை சுரண்டுகிறது, சுரண்டப்படும் இயற்கை வளங்களால் மக்களுக்கு ஏற்படும் வாழ்வாதார நெருக்கடிகளையும் இயற்கை வளங்களை மீட்க நடக்கும் போராட்டமும் என்ற தலைப்பில் பேசினார் உலகமுழுவதும் நடக்கும் போராட்டங்கள் குறித்து உரையாற்றினார்.கால நிலை மாற்றங்கள் குறித்தும், எதிர்கால காலநிலை மாற்றத்தால் மக்கள் எதிர்கொள்ள இருக்கும் இடர்பாடுகளையும் பேசினார்.

aru1

இந்த நிகழ்ச்சியில் நிமிர் பதிப்பகத்தின் வெளியிடான ‘மூடப்படும் ரேசன் கடை அதன் விளக்கமும் பின்னனியும் என்ற நூல் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர் ஜான் பாண்டியன் மற்றும் எஸ்.டிபி.ஐ கட்சியின் மாவட்ட தலைவர், நெல்லை முபாரக்.ஆகியோரால் வெளியிடப்பட்டது.சமூகவியல் துறை பேராசிரியர் சாமுவேல் ஆசிர் ராஜ் நன்றியுரை கூறினார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top