ஹைட்ரோ கார்பன் திட்டம்: முத்தரசன் எச்சரிக்கை.

 

mutharasan

 

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த முயன்றால், மத்திய அரசு கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் எச்சரித்துள்ளார்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் பணியாற்றும் ஒப்பந்த ஊழியர்கள், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேதாரண்யத்தில் இருந்து கொள்ளிடம் வரை, பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிக்கு பாதயாத்திரை இன்று வந்தடைந்தது.

அப்போது, மின்வாரிய ஒப்பந்த ஊழியர்களுக்கு ஆதரவாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசு விவசாயிகளை அலட்சியப்படுத்தி வருவதாகவும், மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, தமது அலுவலகத்தில் தமிழ் நடிகர்களை நிற்க வைத்து ஆலோசனை நடத்தியதாகவும் குற்றம் சாட்டினார். தமிழக மீனவர்களுக்கு நிலவும் பாதுகாப்பற்ற தன்மையை மத்திய அரசு போக்க வேண்டும் எனவும் முத்தரசன் கேட்டுக் கொண்டார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top