மத்திய பிரதேச அரசு மருத்துவமனையில் நோயாளியை தின்ற நாய்கள்.

மத்திய பிரதேச மாநிலம், ராஜ்கர் பகுதி அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவரின் உடலை நாய்கள் கடித்து தின்ற சம்பவம் நடந்துள்ளது.
கடந்த சில நாட்களாக அந்த மருத்துவமனையின் பின்புறம் துர்நாற்றம் அடிப்பதாக டாக்டர்களும், நோயாளிகளும் கூறி வந்துள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, சில நாய்கள் ஒருவரின் உடலை கடித்து தின்று இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், அவரின் தலை மற்றும் உடலின் மேல் பகுதியில் உள்ள சில பாகங்கள் தவிர மாற்ற பகுதிகளை நாய்கள் கடித்து தின்று விட்டன. இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், அது, 70 வயது மதிக்கத்தக்க பெண்ணின் உடல் என தெரிய வந்துள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை மார்ச் 22 முதல் காணவில்லை என கூறப்படுகிறது.

இந்த உடல் எப்படி மருத்துவமனையின் பின்புறம் வந்தது என்பது பற்றியும், நாய்கள் அவரை கடித்து தின்ற போது அவர் உயிருடன் இருந்தாரா என்பது பற்றியும் விசாரித்து வருகிறோம். அந்த உடலை 5 முதல் 7 அடிவரை இழுத்து வந்து நாய்கள் சாப்பிட்டுள்ளது தெரிய வந்துள்ளது என தெரிவித்துள்ளனர். மத்திய பிரதேச அரசு மருத்துவமனைகளில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பது வழக்கமாகி வருகிறது. கடந்த 10 மாதங்களில் நடந்த 5 வது சம்பவம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top