ஆணவ படுகொலைகளை தடுக்க பாராளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும்: திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் ஆணவ படுகொலைகள் எதிர்ப்பு மாநாடு தர்மபுரி வட்டார போக்குவரத்து அலுவலக மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

Thirumavalvan-Says-Parliament-to-pass-legislation-prevent_SECVPF

இந்த மாநாட்டில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு மாநாட்டு தீர்மானங்கள் குறித்து விளக்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

இந்தியாவில் அரியானா, பீகார், பஞ்சாப், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் நடந்து வந்த ஆணவ படுகொலைகள், கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்திலும் அதிகரித்து உள்ளன. இந்திய திருமண சட்டம் இந்து மதத்திற்குள் வெவ்வேறு சாதிகளை சேர்ந்தவர்கள் கலப்பு திருமணம் செய்து கொள்வதை குற்றம் என கூறவில்லை. ஆணவ படுகொலைகளை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவுறுத்தி உள்ளது. இதேபோல் நிர்பயா படுகொலை வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட வர்மா கமி‌ஷன் ஆணவ கொலைகளை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.

ஆணவ கொலைகளை தடுப்பது தொடர்பாக பஞ்சாப் ஐகோர்ட்டு கடந்த 2015-ம் ஆண்டு காவல் துறைக்கு சில முக்கிய ஆணைகளை பிறப்பித்தது. அதன்படி கலப்பு திருமணம் செய்து கொண்டவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

 கிராமப்புறங்களில் கலப்பு திருமணத்தால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முற்போக்கு சிந்தனைகளை கொண்டவர்களை இணைத்து மக்களின் நண்பர்கள் குழு அமைக்க வேண்டும். தனிமனித சுதந்திரத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அதில் அறிவுறுத்தப்பட்டது.

தமிழகத்தில் ஆணவ படுகொலைகளே நடக்கவில்லை என்று அரசு கூறிவந்த நிலையில் ஐகோர்ட்டு நீதிபதி ராமசுப்பிரமணியன், 47 ஆணவ படுகொலைகளை தேதிவாரியாக பட்டியலிட்டார். ஆணவ படுகொலைகளை தடுக்க தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு 9 கட்டளைகளை பிறப்பித்தார்.

இந்த உத்தரவை பிறப்பித்து ஒரு ஆண்டு ஆகியும் ஆணவ படுகொலைகளை தடுக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு இதுவரை எடுக்கவில்லை.

அப்போது அவர்களை மத்திய மந்திரி இருக்கையில் அமர வைக்காமல் நிற்க வைத்து பேசினார். இது மிகவும் கண்டனத்திற்குரியது.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top