அனைத்து உயிர்களையும் கொல்லும் பூச்சி மருந்து நிறுவனங்களின் வல்லாதிக்கம்

பெரும் பயணங்கள் எல்லாம் எடுத்து வைக்கும் முதல் காலடியிலிருந்துதான் தொடங்குகிறது என்பார்கள். நீண்ட சட்டப்போராட்டத்திற்கும் இது பொருந்தும்.”தெரி மெக்கால்” (Teri McCall) என்ற கலிபோர்னியா மாகாணத்தில் வசிக்கும் பெண்ணின் கணவர் “ஜாக்”. இவருக்கு திடீரென்று கழுத்தில் வீக்கம் ஏற்பட்டது. ஜாக்கை பரிசோதித்த மருத்துவர்கள் மிக அரிதாக வரும் Anaplastic large cell lymphoma என்ற வகை புற்றுநோய் தாக்கியிருப்பதை உறுதி செய்தார்கள். அதன் பின் மூன்று மாதத்தில் புற்றுநோயால் வலிப்பு தாக்கியதால்  ஜாக் இறந்தார். கணவரின் இறப்பை தாங்காத “தெரி மெக்கால்” கணவரின் இறப்பிற்கு காரணங்களை கண்டறிய முயற்சித்தார். கணவரின் மரணத்திற்கு காரணமான புற்றுநோயை உண்டாக்கிய காரணிகளை கண்டறிந்தபோது அது கிளைபோசேட் (Glyphosate) என்ற வேதிக்கலவையை கண்டறிந்தார்.

582

அமெரிக்காவில் மிக பரவலாக விவசாயத்தில் பயன்படுத்தப்படும் களைக்கொல்லி பூச்சிமருத்தாகிய, மான்சாண்டோ (Monsanto) நிறுவனத்தின் ‘ரவுண்ட் அப்” (Roundup) பூச்சிக்கொல்லி மருந்து இந்த கிளைபோசேட் (Glyphosate) வேதி கலவையை முக்கிய பொருளாக இருப்பதை அறிந்து மான்சாண்டோ நிறுவனத்திற்கு எதிராக வழக்கை தொடுத்தார். தன்னுடைய கணவரின் இறப்பிற்கு காரணம் என்று மான்சாண்டோ நிறுவனத்தை குறிப்பிட்டு வழக்கு தொடர்ந்தார். மான்சாண்டோ நிறுவனம்,கிளைபோசேட் வேதிக்கலவை புற்றுநோயை உண்டாகும் என தெளிவாக தெரிந்தும் மக்களுக்கு தெரிவிக்காதது அதன் குற்றம் என்று குறிப்பிட்டார். மேலும் “ஜாக் பூச்சிமருந்தைகளை பற்றியும் அதன் அபாயம் பற்றியும் தெளிவாக அறிந்திருந்தார் ஆனாலும் ‘ரவுண்ட் அப்” பாதுகாப்பானதாக இருக்கும் என்று நம்பியது துரதிருஷ்டவசமாக மாறியது” என்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கூறினார்.

இதற்கு முன் தான் , சில மாதங்களுக்கு முன்பு  உலக சுகாதார நிறுவனத்தின் (World Health Organization) ஒரு பிரிவான புற்றுநோய் சர்வதேச ஆராய்ச்சி மையம் ( International Agency for Research on Cancer (IARC) கிளைபோசேட் (Glyphosate) எனப்படும் வேதிப்பொருளானது புற்றுநோயை உண்டாகும் காரணிகளான கார்சினோஜன் (Carcinogen) வகையின் கீழ் கொண்டுவந்தது. இதனால்  கலிபோர்னியா மாகாணத்தின்  சுற்றுசூழல் சீர்கேடுகளை மதிப்பிடும்   Environmental Health Hazard Assessment (OEHHA)  மான்சாண்டோ நிறுவனதிற்கு எதிராக வழக்கு தொடுத்தது. இந்த வழக்கின் இறுதி தீர்ப்பில்தான் இந்த முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன் மூலம் அமெரிக்காவில் முதன் முதலில் இத்தகைய சட்டம் கொண்டுவந்த சிறப்பை கலிபோர்னியா மாகாணம் பெற்றுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் நீதிபதி கடந்த வாரம் கொடுத்த முக்கியத்துவமான தீர்ப்பில் பரவலாக அமெரிக்காவில் பயன்படுத்தப்படும் களைக்கொல்லி பூச்சிமருத்தாகிய, மான்சாண்டோ (Monsanto) நிறுவனத்தின் ‘ரவுண்ட் அப்” (Roundup) பூச்சிக்கொல்லி மருந்து கலனில்  புற்றுநோய் எச்சரிக்கையை சிறுகுறிப்பாக அவசியம் பதிவுசெய்ய வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுளார்.

நீதிபதி கிறிஸ்டி காப்டன் (Kristi Kapetan) கடந்த வாரம் (11/03/2017) கொடுத்த இந்த தீர்ப்பின் மூலம்  ‘ரவுண்ட் அப்” (Roundup) பூச்சிக்கொல்லி ‘ரவுண்ட் அப்” (Roundup) பூச்சிக்கொல்லி மருந்தில் கலந்துள்ள புற்றுநோயை ஏற்படுத்தும் வேதிக்கலவை மிக முக்கிய கிளைபோசேட் (Glyphosate) எனப்படும் வேதிப்பொருள் பாதுகாப்பான குடிநீர் சட்டத்தின் படி (Safe Drinking Water and Toxic Enforcement Act of 1986) கடுமையான கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்படும்.

 

1986ம் ஆண்டு கலிபோர்னியா மக்கள் புற்றுநோயை உருவாக்கும் பொருட்களை அடையாளப்படுத்த வேண்டும் என்று அரசுக்கு வாய்த்த கோரிக்கையின் பலனாக “Proposition 65″ என்ற வகைப்பாட்டியலை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் இந்த அட்டவணையின் கீழ் பட்டியலிடப்படும் வேதி பொருட்களை கொண்டு தயாரிக்கப்படும் அனைத்து பொருட்களும் அறிவியல் சோதனைக்கும் , சட்டபூர்வ அனுமதியையும் பெற்றாக வேண்டும்.  மான்சாண்டோ நிறுவனத்தின்,  ‘ரவுண்ட் அப்” (Roundup) களைக்கொள்ளியில் கிளைபோசேட் இருப்பதால் அந்த களைக்கொல்லி மருந்தையும் இந்த பட்டியலின் கீழ் கொண்டுவந்தது. இதை எதிர்த்து மான்சாண்டோ நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதில் நீதிபதி கிறிஸ்டி காப்டன் (Kristi Kapetan) வழங்கிய தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.

 

பயணத்தின் நடுவே எதிர்ப்படும் சிறு இளைப்பாறலாக இந்த தீர்ப்பை கூறலாம்.  மக்களுக்கான, நீதிக்கான பயணம் இன்னும் பலரால் உலகெங்கிலும் தொடரும்..அதில் ஒரு முன்னேராக “தெரி மெக்கால்” (Teri McCall) சமூகத்தை பண்படுத்துகிறார். இணைவோம் நமக்கான, நீதிக்கான நெடும்பயணத்தில்……

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top