ஐ.நா மனித உரிமை கவுன்சிலில் தமிழக பிரச்சனைகளை பதிவு செய்தது மே பதினேழு இயக்கம்

 

dewwww

கடந்த ஆண்டு முழுவதும்  தமிழக தமிழர்கள் சந்தித்த பிரச்சனைகள் அதிகம் உண்டு. அதில்  மிக முக்கிய பிரச்சனைகளாக கருதுவது;

*பெங்களூர் தமிழர்கள் மீது நடந்த தாக்குதல்

*ஆந்திராவில் தமிழக தொழிலாளர்கள் மீது நடந்த வன்முறைகள்.

*கடந்த முப்பது ஆண்டுகளாக  தொடரும் மீனவர் படுகொலைகள் ஆகியவை.

இவற்றுக்கான தீர்வு இந்திய நீதிமன்றத்தாலும் சரி,  அரசியல் அமைப்பினாலும் சரி தீர்க்கப்படாமல், தமிழர்களை தனித்து விடப்பட்டவர்களாக ஆக்கி இருக்கிறது.இவற்றை உலகப் பொது மன்றங்களுக்கு எடுத்துசெல்ல எந்த அரசியல் கட்சிகளும் முன் வராத நேரத்தில்   மே பதினேழு இயக்கம் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்ட்த்தில் பதிவு செய்தது. அந்த பதிவு தமிழர்களுக்கு சொந்த நாட்டிலேயே எந்த பாதுகாப்பும் இல்லாத சூழலை உலக நாடுகளுக்கு  உணரச்செய்தது.

 

எந்த பத்திரிக்கையிலும் வராத அந்த செய்தி மே பதினேழு இயக்க வலைதளத்தில் அதன் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உரையாற்றியதை பதிவு செய்து இருந்தது.அந்த காணோளியை இங்கு இணைத்து வெளியிட்டு உள்ளோம் மற்றும்  அதில் மே  பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் பேசியது கட்டுரை வடிவில்…

 

வணக்கம்.

நான் தமிழ்நாட்டிலிருந்து வருகிறேன். இந்தியாவின் ஒரு மாநிலமாக 8 கோடி தமிழர்களை கொண்டது. இந்தியர்களான 600 தமிழ் மீனவர்கள் இதுவரை இலங்கை கடற்படையின் கொடூரமான தாக்குதல்களில் உயிர் இழந்துள்ளனர். சமீபத்தில் , சென்ற வாரம் 22 வயது இளைஞர் பிரிட்ஜோ எனும் தமிழகத்தை சேர்ந்த மீனவர் கழுத்தில் சுடப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.

 

இத்தாக்குதலில் மற்றுமொருவர் கடுமையாக காயமைடைந்துள்ளார். கண்மூடித்தனமான இலங்கை கடற்படையின் தாக்குதல்கள் பேரிழப்பை தந்துள்ளன. 2011 ஜனவரியில் அடுத்தடுத்த வாரங்களில் 2 மீனவர்கள் கொல்லப்பட்டனர். இலங்கை கடற்படையை சார்ந்த ஒரு அதிகாரி படகினுள் ஏறி, தமிழக மீனவர் திரு.ஜெயகுமார் அவர்களது கழுத்தை சுற்றி கயிரால் இறுக்கி உள்ளார். அதன் பின், அவ்வாறே கடற்படை கப்பல் மூலம் கடலில் மூழ்கடிக்கப்பட்டவாறே இழுத்து செல்லப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். 2011 ஏப்ரலில் 4 மீனவர்கள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். ஒருவர் தலை துண்டிக்கப்பட்டும் மற்றொருவர் உயிருடன் புத்தக்கப்பட்டும் கொல்லப்பட்டனர். 167 சம்பவங்களில் தமிழக மீனவர்கள் சுடப்பட்டு அதில் 85 மீனவர்கள் உயிர் இழந்துள்ளதாகவும் 185 மீனவர்கள் காயமடைந்துள்ளதாகவும் இந்திய அரசே உயர் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்திய அரசாங்கத்தின் செயலற்ற தன்மையும், கொடூர இலங்கை அரசுடனான கூட்டும் தமிழ் மீனவர்களை வெகுவாக பாதித்தும் அவர்களது வாழ்வாதாரத்தை அழித்தும் உள்ளது. இலங்கை அரசை பாதுகாத்தும், ஊக்கப்படுத்தியும் வந்ததன் மூலம் ஈழ தமிழர் மீதான இனப்படுகொலை மட்டுமின்றி இந்திய நாட்டை சார்ந்த 600 தமிழ் மீனவர்களின் கொலைக்கும் இந்திய அரசு காரணமாகி உள்ளது.

தமிழர் விரோத பேரினவாத சிங்கள அரசு தொடர்ச்சியாக இந்தியர்களாக உள்ள தமிழ் மீனவர்களை தாக்குதல் நடத்தி கொன்று வருகிறது. மற்றொரு நாட்டின் குடிமக்கள் என்பதையும் மதிக்காது அதனையும் மீறி, இவை தமிழருக்கு எதிராக சிங்கள அரசால் முன்னெடுக்கப்படும் அரச பயங்கரவாதம் ஆகும்.

இந்தியாவின் அந்திர மாநிலத்தில் தமிழக தொழிலாளர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் நீதிக்கு அப்பாற்பட்டு கொல்லப்பட்ட 20 தமிழர்கள் பற்றியும் ஜூன் 2016யில் நாங்கள் அறிக்கையில் பதிவு செய்தோம். 20 தமிழர்கள் கொல்லப்பட்டதன் தொடர்பாக இதுவரை குற்றவாளிகள் என்று யார் மீதும் புகார் பதிவு செய்யப்படவில்லை. அதன் தொடர்ச்சியாக கோயிலுக்கு சென்ற பக்தர்கள் உட்பட 1000 தொழிலாளர்கள் இதுவரை கைது செய்யப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டுள்ளனர். வீடியோவில் காண்பிக்கப்பட்டது போல கடந்த வாரம் நடந்த ஒரு சம்பவத்தில் 179 தொழிலாளர்கள் கொடுமை செய்யப்பட்டு அரை நிர்வாணமாக அழைத்து செல்லப்பட்டனர்.

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிடும் படி 2016 செப்டம்பரில் இந்தியாவின் உச்ச நீதிமன்றம் இந்தியாவின் மற்றொரு மாநிலமான கர்நாடத்திற்கு உத்தரவிட்டது. இதன் விளைவாக பெங்களூருவில், கர்நாடகத்தில் உள்ள தமிழர்கள் மீது வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன. தமிழர்களுடைய கடைகளும் மற்ற சொத்துக்களும் குறிவைத்து தாக்கப்பட்டன.
பள்ளி மற்றும் அலுவலகங்கள் செல்லும் வழியில் தமிழர்கள் பொது இடங்களில் தாக்கப்பட்டனர். சில தமிழர்கள் பொது மக்கள் முன்னிலையில் நிர்வாணப்படுத்தப்பட்டும் துன்புறுத்தப்பட்டனர். தமிழர்கள் தாக்கப்பட்டது, தாக்கியவர்களின் வெற்றி களிப்பில் வீடியோ பதிவுகளாக வெளிவந்தன. கர்நாடக அரசும் இந்திய அரசும் வன்முறையை தடுக்க ஏதும் செய்யவில்லை, தாக்கியவர்களையும் கைது செய்யவில்லை. இனவாத திருடர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனைகள், அவர்களை இந்தியாவில் உள்ளேயே தமிழர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்த ஊக்குவிக்கிறது.

ஜனநாயக முறையில் அமைந்த தமிழக சட்டமன்றத்தில் 2013 ஒரு தீர்மானம் நிறைவேற்றியது. அதில் இலங்கையை நட்பு நாடாக கொள்ள கூடாது என்றும் ஈழ தமிழர்களுகிடையே சுதந்திர தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் புதுதில்லியை (மத்திய அரசை) தமிழக அரசு கேட்டுக்கொண்டது.

என பேசியுள்ளார்

வீடியோ இணைப்பு;


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top