மத்திய அரசு, வறட்சி நிவாரண நிதியாக தமிழகத்திற்கு ரூ.1748.28 கோடி ஒதுக்கீடு.

 

varatchi2

 

தமிழகத்தில் பருவமழை போதிய அளவு பெய்யாததால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.குறிப்பாக காவிரி பாசன விவசாயிகளுக்கு போதிய தண்ணீர் கிடைக்கவில்லை. பயிர்கள் காய்ந்து போனதை கண்டு மனம் உடைந்த விவசாயிகள் சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். சிலர் அதிர்ச்சியில் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடி வறட்சி நிவாரண நிதி, விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் டெல்லியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழகத்துக்கு வறட்சி நிவாரண நிதியாக தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து ரூ.39 ஆயிரத்து 565 கோடி வழங்கவேண்டும் தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடபட்டு இருந்தது.

தமிழகத்தில் ஏற்பட்ட வறட்சி குறித்து மத்திய குழுக்கள் கடந்த ஜனவரி மாதம் 22-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை ஆய்வு செய்தது. இந்த ஆய்வின் அடிப்படையில் மத்திய குழு தமிழகத்திற்கு வறட்சி நிவராணமாக ரூ.2096.80 கோடி வழங்க மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக மத்திய அரசு  ரூ.1748.28 கோடி ஒதுக்கி உள்ளது.ரூ.2o96.80கோடி ரூபாய் நிவாரணநிதியாக மத்திய அரசு பரிந்துரை செய்த பொது நிதி வறட்சி இழப்பிடுக்கு குறைவாக உள்ளது என்று விவசாயிகள் அறிவித்திருந்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top