ராகுலை பிரதமராக்க சோனியா ஆந்திராவை பிரித்து விட்டார்: ஜெகன்மோகன் ரெட்டி

175ba798-2267-4ed8-b487-650a5ab22c99_S_secvpfஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சீமாந்திராவில் அனைத்து தொகுதியிலும் போட்டியிடுகிறது. தெலுங்கானா பகுதியில் 98 சட்டமன்ற தொகுதியிலும், 11 பாராளுமன்ற தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. அவர்களை ஆதரித்து தெலுங்கானா பகுதி கம்மம் மாவட்டத்தில் ஜெகன்மோகன் ரெட்டி பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:–

எனது கட்சி சீமாந்திராவில் மட்டுமே ஜெயிக்க முடியும். தெலுங்கானாவில் எங்கள் அரசியல் வாழ்வு முடிந்து விட்டது போல பேசுகிறார்கள். நம்நாட்டை சேராத, நம் மொழி தெரியாத, ஆந்திராவில் எந்தந்த மாவட்டங்கள் எங்கு உள்ளது என்று தெரியாத சோனியா காந்தி ஆந்திரா மாநிலத்தை 2 ஆக பிரித்து விட்டார்.

மகன் ராகுலை பிரதமராக்க சோனியா ஆந்திராவை 2 ஆக பிரித்தார். ஏதோ ஒரு நாட்டை சேர்ந்த அவர் இங்கு அரசியல் செய்யும் போது நான் தெலுங்கானாவில் அரசியல் செய்யக்கூடாதா? அதனால்தான் தெலுங்கானா பகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளேன்.

தெலுங்கானா, ஆந்திரா என்ற 2 குடும்பத்தை ராஜசேகர ரெட்டி எனக்கு கொடுத்து விட்டு சென்றுள்ளார். தெலுங்கானா பகுதியில் கூட்டணி ஆட்சிதான் ஏற்படும். அதில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் முக்கிய பங்கு வகிக்கும். தமிழகத்தில் நடந்த தேர்தலை போல சீமாந்திராவிலும் தேர்தல் முடிவு வரும்.

சீமாந்திரா முழுவதும் ஒட்டு மொத்தமாக எங்கள் கட்சி வெற்றி பெறும். தெலுங்கானாவில் கட்சிப் பணிகளையும், மக்களையும் என் சகோதரி ஷர்மிளா கவனித்துக் கொள்வாள்.

நான் சீமாந்திராவில் முதல்வராக பதவி ஏற்றாலும் தெலுங்கானா மக்களை மறக்க மாட்டேன். மாநிலத்தை வேண்டுமானால் 2 ஆக பிரித்திருக்கலாம். தெலுங்கு மொழி பேசும் மக்களை பிரிக்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top