ராஜஸ்தானுக்கு எதிரான மோசமான தோல்வியை மறக்க விரும்புகிறோம்: கோலி

kohli in iplஐ.பி.எல். போட்டியில் நேற்று நடந்த 14–வது ‘லீக்’ ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்– ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி ராஜஸ்தானின் அபாரமான பந்துவீச்சில் திணறியது. அந்த அணி 70 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் கோலி 21 ரன் எடுத்தார். 3 வீரர்கள் ‘டக்’ அவுட் ஆனார்கள்.

ராஜஸ்தான் வீரர் தாம்பே 4 விக்கெட் வீழ்த்தினார். பெங்களூர் அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு கொல்கத்தாவுக்கு எதிராக 82 ரன்னில் ஆல்–அவுட் ஆகி இருந்தது.

71 ரன் இலக்கை ராஜஸ்தான் அணி 13 ஓவரில் 4 விக்கெட்டை இழந்து எடுத்து வெற்றி பெற்றது. இந்த மோசமான தோல்வியால் பெங்களூர் கேப்டன் வீராட் கோலி கடும் அதிருப்தி அடைந்தார். தோல்வி குறித்து அவர் கூறியதாவது:–

இந்த மோசமான தோல்வி வருத்தம் அளிக்கிறது. ஒவ்வொரு ஓவரிலும் விக்கெட் சரிந்தால் நெருக்கடி ஏற்பட்டுவிடும். இதுபோல் இந்த ஆட்டத்தில் நடத்துவிட்டது.

ஆடுகளம் பேட்டிங்குக்கு ஏற்றதாக இருந்தது. ஆனால் நாங்கள் அதை சரியாக பயன்படுத்தி கொள்ளவில்லை. 70 ரன்னில் சுருண்டதால் பீல்டிங் செய்ய வர அணி வீரர்களுக்கு மனமே இல்லை. இந்த மோசமான தோல்வி சீக்கிரம் மறக்க விரும்புகிறோம் என்றார்.

ராஜஸ்தான் கேப்டன் வாட்சன் கூறும்போது, தாம்பே பந்துவீச்சு அபாரமாக இருந்தது. குறிப்பாக வீராட் கோலி விக்கெட்டை கைப்பற்றியது சிறப்பானது. பயிற்சியின் போது அவரது பந்தை எதிர்கொள்வது கடினமாக எனக்கு இருக்கும். அவர் சுழற்பந்தில் சிறந்த வீரர். 2 தோல்விக்கு பிறகு வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top