தேர்தல் ஆணையம்; வாக்காளர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கும் முறை அமலாகிறது.

 

ஆர்.கே.நகர் தேர்தலில் வாக்காளர்களுக்கு ஒப்புகை சீட்டு வழங்கும் முறையை அமல்படுத்த therthal முடிவு செய்துள்ளது.

ஆர்.கே.நகரில் உள்ள 256 வாக்குச்சாவடிகளிலும் புதிய முறையை பயன்படுத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வாக்காளர்கள் உறுதி செய்யும் வகையில், இந்த ஒப்புகைச் சீட்டு வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

இதன் மூலம், வாக்காளர்கள் ஓட்டு போட்டதும், யாருக்கு வாக்கு பதிவாகியுள்ளது என்ற ஒப்புகை சீட்டு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, வாக்குசாவடிகளில் பொருத்தப்பட்ட கேமராக்கள் மூலம் பதிவான வீடியோ காட்சிகளை யார் வேண்டுமானாலும் கட்டணம் செலுத்தி பெற்று கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top