ஆண் குழந்தை பிறக்கும், வாக்குறுதியுடன் மருந்துகள் விற்பனை; மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.

marunthcal
ஆண் குழந்தை வாக்குறுதியுடன் மருந்துகள், பவுடர்கள் விற்பனை செய்யப்படும் விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டு உள்ளது.
மாநிலங்களவையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஆண் குழந்தை பெற்று கொள்வதற்காக தம்பதிகள் மருந்து சாப்பிடுவது குறித்து கவலை எழுப்பட்டது.
மாநிலங்களவையில் பூஜ்ஜிய நேரத்தில் இப்பிரச்சனையை எடுத்த பா.ஜனதா எம்.பி. விஜய் பி.சகஸ்ராபுத்தே பேசுகையில், இதுபோன்று ஆண் குழந்தைதான் வேண்டும் என்று மருந்துகள் மற்றும் பவுடர்களை சாப்பிடும் தம்பதியினர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் தெளிவற்ற நிலையில் பிறக்கின்றன. குழந்தைகள் ஆண்-பெண் தன்மை கலந்து பிறக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. பின்னர் அக்குழந்தைகள் பெற்றோர்களால் கைவிடப்படுகிறார்கள் அல்லது திருநங்கையரிடம் ஒப்படைக்கப்படுகிறது.
தங்களுக்கு ஆண் குழந்தைதான் வேண்டும் என்ற மனப்போக்கை கொண்ட தம்பதியினர் அதற்கான  மற்றும் பவுடர்களை தேடி அலையும் நிலையானது உள்ளது. இந்த ஆர்வமானது அவர்களை கண்மூடித்தனமாக மருந்துக்கள் மற்றும் பவுடர்களை, மூலிகைகளை எடுத்துக் கொள்ள செய்கிறது. ஆண் குழந்தைக்காக இதுபோன்று மருந்துகள் மற்றும் பவுடர்கள் சாப்பிடும் காரணத்தினால் கருச்சிதைவு, குறைபாடுடைய குழந்தைகள் பிறப்பது, குழந்தை இறந்து பிறப்பது மற்றும் பல்வேறு பிற பக்கவிளைவுகளுடன் முடிய வாய்ப்பு உள்ளது என்றார்.
மாநிலங்களவையில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் கருத்து வேறுபாடு இன்றி மத்திய அரசு இவ்விவகாரத்தை கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தின. இந்த விவகாரத்தை மத்திய அரசு தீவிரமாக கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியன் கூறினார்.
இதற்கு பதிலளித்த சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா இந்த விஷயம் குறித்து அரசு விசாரித்து நடவடிக்கை எடுக்கும் என்றார்.

கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top