இலங்கை அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கியதை எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது. வடக்கு மாகாண முதல்வர்

இலங்கை அரசாங்கத்துக்கு கால அவகாசம் வழங்கியதை எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது. இதுவரை வழங்கிய கால அவகாசத்தினால் மக்கள் என்ன நன்மைகளைப் பெற்றார்கள் என்பது தொடர்பில் நாம் ஆராய்ந்து பார்க்கவேண்டுமெனவும் வடக்கு மாகாண முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

இலங்கை அரசாங்கத்துக்கு நிபந்தனையுடன்கூடிய கால அவகாசம் வழங்கவேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்த கருத்துத் தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், என்னைப்பொறுத்தவரை கால அவகாசம் கொடுப்பது பிழையானது. ஏன்னென்றால் இதுவரை காலமும் செய்யப்பட்டதில்மக்களுக்கு என்னவிதமான நன்மையை கொடுத்தது என்று நாங்கள் அறிய வேண்டும்.

உதாரணமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் அலுவலகம் என்று ஒன்று இருக்கிறது. அந்த அலுவலகம் இந்தா வருகிறது எல்லாம் நடைபெறுகிறது என்று கூறினார்கள். ஆனால் எதுவுமே நடைபெறவில்லை.

கடைசியாக அது  கடித்தில்தான் இருக்கிறதே தவிர மக்களுக்கு அது போய்சேரவில்லை. இதுவரை காலமும் மக்களுக்கு போய் சேர்ந்த விடயங்கள் என்னென்ன?

என்னென்ன நன்மைகளை அரசாங்கம் செய்திருக்கிறது என்பதை முதலில் சர்வதேச நாடுகள் உணர்ந்துகொள்ள வேண்டும், ஆராய வேண்டும். அவ்வாறு செய்யாமல் ஏதோவொரு அரசியல் காரணங்களுக்காக இன்றும் இரண்டு வருடங்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறுவது சரியாக எனக்குப்படவில்லை. இது என்னுடைய கருத்து.

தலைமை வேறுவிதமான கருத்தை வைத்திருந்தாலும் அதாவது அவர்கள் குறிப்பிடுவது என்னவென்றால் அவ்வாறு கால அவகாசம் கொடுக்கும் காலத்தில் கண்காணிப்பு நடக்கவேண்டும் என்று கூறுகின்றார்கள்.

அதுவும் ஒரு முறை. ஆனாலும் என்னால் அதை ஏற்றுக்கொள்ள  கடித்தில் தான்   என்றாலும் அதை தலைமை கூறி வைத்திருக்கிறது. எங்களை பொறுத்தவரை இதுவரை காலமும் நடைப்பெற்றதில் மக்களுக்கு என்னவிதமான நன்மையை கொடுத்திருக்கிறது என்றுதான் அதிலிருந்து முன்னேறிச் செல்ல வேண்டும் என தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top