ஆந்திராவில் ஜனாதிபதி ஆட்சி ஜூன் 2–ந்தேதி வரை நீட்டிப்பு

Andhra-governor-Narasimhan-PTIஆந்திர மாநில கவர்னர் நரசிம்மன் திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வந்தார். தரிசனம் முடிந்து வெளியே வந்த அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

ஆந்திராவில் கிரண்குமார் ரெட்டி முதல்–மந்திரி பதவியை ராஜினாமா செய்த பிறகு அங்கு ஜனாதிபதி ஆட்சி அமுல்படுத்தப்பட்டுள்ளது. 2 மாநிலங்களை உருவாக்குவதற்கு வசதியாக ஜனாதிபதி ஆட்சி நடந்து வருகிறது.

ஜனாதிபதி ஆட்சி நிர்ணயிக்கப்பட்ட நாள் முடிந்து விட்டதால் புதிய மாநிலங்களை உருவாக்கும் வகையில் ஜூன் 2–ந்தேதி வரை ஜனாதிபதி ஆட்சி நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் முடிவு முன்னரே அறிவிக்கப்பட்டாலும் கூட ஜூன் 2–ந்தேதிக்கு பிறகுதான் 2 மாநிலங்களையும் முதல்–மந்திரிகள் ஆட்சி செய்ய முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top