மத்திய அரசு செவிமடுக்க மறுப்பதாக ; தமிழக விவசாயிகள் வேதனை.

 

vivasayi34

 

டெல்லியில் தொடர்ந்து 7-வது நாளாக போராடி வரும்  விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய  அரசு செவிமடுக்க மறுப்பதாக  ; தமிழக விவசாயிகள் வேதனை.

தங்களை தீண்டத்தகாதவர்கள் போல் நடத்துவதாகவும், மத்திய அரசு தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவும்,யை ஏற்கவும் மறுப்பதாக தமிழக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு கடும் வறட்சி நிலவுகின்ற நிலையில் தங்களுக்கு வறட்சி நிவாரணம் வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தொடர்ந்து ஏழாவது நாளாக தமிழக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் போராட்டக் குழுத் தலைவர் அய்யாகண்ணு, கடந்த வருடம் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தங்களுக்கு உதவுவதாக வாக்களித்தாகவும், ஆனால் அது நிறைவேற்றப்படவில்லை என்றும், இதுவரை 400 விவசாயிகள் உயிரிழந்துவிட்டதாகவும் ஆனால் யாருக்கும் எந்த இழப்பீடும் கிடைக்கவில்லை என்றும் விவசாயிகள் தெரிக்கின்றனர்.

தங்களுக்கு வறட்சி நிவாரணம் கிடைக்கும்வரையும் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரையும் தங்கள் போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று உறுதியாக தெரிவிக்கின்றனர் விவசாயிகள்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top