தாமிரவருணி எங்கள் அடையாளம்; சுத்தம் செய்ய களமிறங்கிய கிராம மக்கள்.

 

thirunelveli

 

திருநெல்வேலி, அருகே தங்களது சொந்த செலவில் நதியை பாதுகாக்க களமிறங்கினர் கிராமமக்கள் முதற்கட்டமாக பொற்லைன் இயந்திரம் மூலம் 3,கி.மீ தொலைவுவைரை உள்ள அமலை செடிகளை அப்புறபடுத்தினர் .

பொதிகை மலையில் புன்னைகாயல் கடலில் கலக்கும் தாமிரபரணியின் நதியின்  மூலம் பல்வேறு மாவட்ட விவசாயிகள் மற்றும் மக்கள் பயனடைந்து வருகிறார்கள் இதில் அமலை செடிகள், கழிவுநீர் கலப்பு ,ஆக்கிரமிப்பு  போன்ற பல்வேறு காரணங்களால் தாமிரபரணி நதி பாழ்பட்டு வருகிறது.

2௦16ஆம் ஆண்டு வடகிழக்கு மலை பொய்த்துவிட்ட போதிலும் மேற்கு தொடர்ச்சி  பகுதிகளில் பெய்த மழையால் பிரதான அணைகளில் இருந்து வரும் நீரை கொண்டு நீர் பற்றாக்குறையை சரி செய்ய முடிகிறது .

மேலும் கழிவு நீர் கலப்பால் தற்போது நீர் மிகவும் மாசுபடிந்து  வருவதால் பொதுமக்கள் அவதிபட்டநிலையில், அரசும் எந்த நடவடிக்கை  மேற்கொள்ளாத சூழ்நிலையில், பொது மக்களே களத்தில் இறங்கி நதியை சுத்தம் செய்ய முன்வந்துள்ளனர்

மேலும் இதனை தொடர்ந்து  நதியை  பாதுகாக்க,  அங்கு கழிவு பொருட்களை கொட்டுவோர் மீதும்  தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க முன் வர வேண்டும் மற்றும்   நிதி ஒதிக்கீடு ,போர்கால நடவடிக்கை எடுக்கவேண்டும் என அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top