தமிழர் விடியல் கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க கூட்டம்

tamilar

2015-ஆம் ஆண்டு மார்ச் 9-ஆம் தேதி துவங்கப்பட்ட தமிழர் விடியல் கட்சி மூன்றாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. இதை அனுசரிக்கும் விதமாக விழுப்புரத்தில் கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா கூட்டம் நடைபெற்றது.

கட்சித் தோழர்கள், தோழமை இயக்கங்களின் தோழர்கள். பொதுமக்கள் உட்பட 350-க்கும் மேற்பட்ட மக்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர். தமிழர் விடியல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் டைசனும், இளமாறனும் எழுச்சியுரையாற்றினார்.

tamilar2

 

இக்கூட்டத்துக்கு விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கந்தன் தலைமை தாங்கினார்.

கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக தமிழர் விடியல் கட்சியின் கொடியை அறிமுகம் செய்த த.பெ.தி.க-வின் பொதுச் செயலாளர் கோவை ராமகிருட்டிணன் அவர்களும்; தொடர்ந்து சாதி ஒழிப்பு களத்திலும், தமிழ்த் தேசிய களத்திலும் வீரியமிக்க போராட்டட்டங்களை முன்னெடுக்கும் தமிழ்ப் புலிகள் கட்சியின் தலைவர் நாகை திருவள்ளுவன் அவர்களும்; சல்லிக்கட்டு, மீத்தேன், ஆணவப் படுகொலை, நெடுவாசல், ஈழ விடுதலை என்று ஓயாமல் போராடி கொண்டிருக்கும் மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணப்பாளர் பிரவீன் அவர்களும் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர்.

 

tamilar3

“மையம் கலைக் குழு” சார்பில் தமிழர்களின் பாரம்பரிய இசையான பறை இசையுடன் கூட்டம் தொடங்கியது.

இந்தியா-இலங்கை கூட்டுச் சதியால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் தோழர் பிரிட்ஜோ, பார்ப்பனிய வெறியர்களால் நிறுவனப் படுகொலை செய்யப்பட்ட டெல்லி ஜவகர்லால் பல்கலைகழக தலித் மாணவர் தோழர் முத்துகிருஷ்ணன், கோவையில் முசுலிம் மத வெறியர்களால் கொல்லப்பட்ட திரவிடர் விடுதலை கழக தோழர் பாரூக் ஆகியோர்க்கு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

tamil-parattu

இக்கூட்டத்தில், சென்ற ஆண்டு காவேரி விவகாரத்தின் இந்திய அரசின் தமிழர் விரோத செயல்பாட்டை கண்டித்து இந்திய அலுவலகமான ஒ.என்.ஜி.சி கட்டிடத்தின் மீது தாக்குதல் வழக்கில் கைதாகி 19 நாட்கள் சிறை சிறை சென்று விடுதலையான:
* கந்தன், விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்,
* அருண்குமார், இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர்,
* நவீன், மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்,
* ஸ்ரீபிரசாத், விழுப்புரம் மாவட்ட மாணவர் பாசறை ஒருங்கிணைப்பாளர்.
ஆகியோரை பாராட்டும் விதமாக அவர்களுக்கு தலைவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

பின்பு, கட்சியின் கரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் கார்த்திக், செய்தி தொடர்பாளர் சைலேந்தர், மாநில மாணவர் பாசறை ஒருங்கிணப்பாளர் நவீன் ஆகியோர் உரையாற்றினர்.

 

tamilar1

தமிழர் விடியல் கட்சியின் கொள்கைகள், முன்னெடுத்த போராட்டங்கள், செயற்பாடுகள் குறித்து சிறப்பு அழைப்பாளர்களும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களும் உரையாற்றினர்.

எழுச்சியோடு நடந்த தமிழர் விடியல் கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்க விழா கூடத்தை கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணப்பாளர் அருண் நன்றியுரையாற்றி நிறைவு செய்தார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top