ஐபிஎல் கிரிக்கெட்: பஞ்சாப்பிடம் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது கொல்கத்தா!

kingsxipunjab-640ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

அபுதாபியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்தது. அதிக பட்சமாக வீரேந்தர் சேவாக் 37 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணியில் சுனில் நரைன், பியுஷ் சாவ்லா தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

133 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணியில் தொடக்கம் முதலே வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து 18.2 ஓவர்களில் அந்த அணி 109 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பஞ்சாப் அணி சார்பில் சந்தீப் ஷர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

kingsxipunjab-640


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top