ஐ.நா. வுக்கான அமெரிக்க நிதி குறைக்கப்பட்டது பொதுச்செயலாளர் குத்தேரஸ் கவலை

ஐ.நா. சபைக்கு அமெரிக்க அரசு ஆண்டுதோறும் நிதி வழங்குவது வாடிக்கை.

அமெரிக்க அரசு ஆண்டுதோறும் சுமார் ரூ.66,000 கோடி நிதியுதவி அளித்து வருகிறது. இந்த நிதியுதவியை பாதியாகக் குறைக்க அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.

 

uterres0

இதேபோல வெளிநாடுகளுக்கு அளிக்கப்படும் நிதியுதவியை 28 சதவீதம் குறைக்கவும் அதிபர் ட்ரம்ப் முடிவு செய்துள்ளார். அதேநேரம் ராணுவத்துக்கான நிதியுதவு 10 சதவீதம் அதிகரிக் கப்பட உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நா. சபையில் அண்மையில் பேசிய அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே, ஐ.நா. சபை அதிகமாக செலவு செய்கிறது. இதனால் அமெரிக்காவுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்படுகிறது என்று குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் கூறியதாவது:

ஐ.நா. சபையின் பட்ஜெட்டில் 22 சதவீத நிதியுதவியை அமெரிக்கா அளித்து வருகிறது. திடீரென நிதியுதவியை குறைக்க அமெரிக்க அரசு முடிவு செய்திருப்பது கவலையளிக்கிறது. இதனால் ஐ.நா. சபையின் சீர்திருத்தப் பணிகள், அமைதிப் பணிகள், நீண்டகால திட்டங்கள் வெகுவாகப் பாதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top