ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக வடகாடு மற்றும் நல்லாண்டார் கொல்லையில் மக்கள் நூதன போராட்டம்

 

hydro_

 

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கப்பட உள்ளதாக பிப்ரவரி 15-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது.

இந்த திட்டத்தை செயல்படுத்தினால் விவசாயத்துக்கு முன்னோடியாக திகழும் இப்பகுதி பாலைவனமாக மாறும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களின் வாயிலாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

மாநில அரசின் உத்தரவு மற்றும் மத்திய அரசின் வேண்டுகோளை ஏற்று நெடுவாசலில் போராட்டம் கைவிடப்பட்டது. எனினும், நல்லாண்டார்கொல்லையில் 31-வது நாளாகவும், வடகாட்டில் 14-வது நாளாகவும் நேற்று போராட்டம் நடைபெற்றது.

இதில், நல்லாண்டார்கொல்லையில் மக்கள் மடியேந்தியும், தட்டுகளின் மூலமும் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல, வடகாட்டில் தங்களது வீடுகளில் உள்ள பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களோடு, கால் நடைகளை பிடித்துக்கொண்டு அகதிகளாக வெளியேறும் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டனர்.

இந்தப் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்தினால் சொந்த நாட்டில் அகதிக ளாகும் சூழல் ஏற்படும் என்றும் இருக்கும் வளத்தை விட்டுவிட்டு மற்றவர்களிடம் பிச்சை எடுக்கும் நிலை ஏற்படுமென்பதையும் தங்களது போராட்டங்களின் வாயிலாக மத்திய அரசுக்கு தெரிவிப்பதாக இரு இடங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top