இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்: கரை திரும்பிய இந்திய மீனவர்கள்! நடவடிக்கை எடுக்காத இந்தியா!

shoal-

 

ராமேஸ்வரத்தில் இருந்து நீண்ட நாள்களுக்கு நேற்று சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.

இவர்கள் சர்வதேச கடல் எல்லையான கச்சத்தீவு அருகே மீன் பிடித்து கொண்டு இருந்த இந்திய  மீனவர்களை ரோந்து பணியில் இருந்த இலங்கை கடற்படை கற்களை வீசியும், தடிகளை கொண்டும் தாக்கினர்.

இதனால்  அச்சமடைந்த மீனவர்கள் கரைக்கு திரும்பினார். இலங்கை கடற்படையின் அட்டூழியம் தொடர்வதாகவே கரை திரும்பிய மீனவர்கள் புகார் தெரிவித்தனர்.

இதற்கிடையில் இந்திய எல்லை தாண்டி மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லக்கூடாது எனவும் அரசால் தடை செய்யப்பட்ட வலைகளைக் கொண்டு மீன்பிடிக்கக் கூடாது என்றும் மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய எல்லையில் மீன் பிடித்துக்கொண்டிருந்தவர்களை இலங்கை கடற்படை விரட்டியதை கண்டிக்காமல் எல்லையில் நின்ற தமிழ் மீனவர்களை கண்டித்து அவர்களுக்கு தடை விதிக்கும் இந்திய மீன்வளத்துறையை கண்டித்து இந்திய மீன்வளத்துறை மீது நடவடிக்கை எடுக்க போராட்டம் நடத்த தயாரகுகிறார்கள்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top