நீதிபதி கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கைது செய்ய உச்ச நீதிமனறம் உத்தரவு

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராக தவறிய கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணனுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த பிடி வாரண்ட்டை ஒப்படைப்பதற்காக மேற்கு வங்காளம் மாநில போலீஸ் டி.ஜி.பி. அவரது வீட்டுக்கு விரைந்துள்ளார்.

அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி பணியிட மாற்றத்தை ரத்து செய்த சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி கர்ணன் மீது சென்னை ஐகோர்ட் பதிவாளர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இவ்வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தற்போது கொல்கத்தா நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றும் சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி கர்ணனுக்கு சுப்ரீம் கோர்ட்டு சம்மன் அனுப்பி இருந்தது.

அதன்படி, கோர்ட்டின் முன்னர் அவர் ஆஜராக தவறியதால் பத்தாயிரம் ரூபாய் பிணைத்தொகையை சொந்த ஜாமினாக செலுத்தும் வகையிலான பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜகதீஷ் சிங் கேஹர் தலைமையிலான ஏழு நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்தது. இதற்கிடையில், தனக்கு எதிராக பிடி வாரண்ட் பிறப்பித்த சுப்ரீம் கோர்ட் மீது 14 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப் போவதாக கொல்கத்தா நீதிபதி கர்ணன் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில் ஆஜராக தவறிய கொல்கத்தா ஐகோர்ட் நீதிபதி கர்ணனுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த பிடி வாரண்ட்டை ஒப்படைப்பதற்காக மேற்கு வங்காளம் மாநில போலீஸ் டி.ஜி.பி. மற்றும் கொல்கத்தா நகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் இன்று பகல் 12 மணியளவில் நீதிபதி கர்ணனின் வீட்டுக்கு விரைந்துள்ளார்.

வாரண்ட்டில் கண்டுள்ளபடி, அவர் போலீசாரிடம் தன்னை ஒப்படைத்து, பின்னர் பத்தாயிரம் ரூபாய் சொந்த ஜாமினில் விடுவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொல்கத்தாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தை தொடர்ந்து, நீதிபதி கர்ணன் வீட்டின் முன்னர் ஏராளமான ஊடகங்களை சேர்ந்த செய்தியாளர்கள் குவிந்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top