பெடரரிடம் வீழ்ந்தார் நடால்.

rapel

பிஎன்பி பரிபாஸ் ஓபன் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்றில் ரபேல் நடாலை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். மற்றொரு ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான ஜோகோவிச் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.

அமெரிக்காவின் கலிபோர்னி யாவில் உள்ள இந்தியன் வெல்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது. இதில் 5-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபேல் நடாலை எதிர்த்து விளையாடிய 9-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-2, 6-3 என்ற நேர் செட்டில் எளிதாக வெற்றி பெற்றார். இந்த ஆட்டம் 68 நிமிடங்களில் முடிவடைந்து.

மற்றொரு ஆட்டத்தில் 2-ம் நிலை வீரரான செர்பியாவின் ஜோகோவிச் 4-6, 6-7 என்ற நேர் செட்டில் 15-ம் நிலை வீரரான ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸிடம் தோல்வியடைந் தார். கடந்த வாரம் நடைபெற்ற மெக்சிகோ டென்னிஸ் போட்டி யிலும் ஜோகோவிச்சை, கிர்ஜி யோஸ் வீழ்த்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கால் இறுதியில் கிரிஜியோஸ், ரோஜர் பெடரருடன் மோத உள்ளார். 3-ம் நிலை வீரரான சுவிட்சர்லாந்தின் வாவ்ரிங்கா 3-6, 6-3, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் ஜப்பானின் நிஷியோ காவை வீழ்த்தி கால் இறுதிக்கு முன்னேறினார். கால் இறுதியில் வாவ்ரிங்கா, ஆஸ்திரியாவின் டொமினிக் தியமை எதிர்கொள்கிறார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற கால் இறுதி ஆட்டங் களில் 3-ம் நிலை வீராங்கனையான செக் குடியரசின் பிளிஸ்கோவா 7-6 (7-2), 7-6 (7-5) என்ற நேர் செட்டில் 7-ம் நிலை வீராங்கனை யான ஸ்பெயினின் கார்பைன் முகுருசாவையும், 8-ம் நிலை வீராங்கனையான சுவெட்லனா குஸ்நெட்சோவா 6-3, 6-2 என்ற நேர் செட்டில் 19-ம் நிலை வீராங்கனையான ரஷ்யாவின் அனஸ்டசியா பாவ்லிசென் கோவாவையும் வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top