அசத்தும் பாகுபலி 2 டிரைலர்,ஏப்ரல் 28 திரையரங்குகளில்.

 

PAKUPALI

 

பிரபாஸ் ராணாடகுபதி சத்யராஜ் அனுஷ்கா தமன்னா ரம்யாகிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் ஆகிய மொழிகளில் வெளியாகும் படம் பாகுபலி 2 இதனை இயக்கியவர் ராஜமௌலி

முன்னதாக இவர் இயக்கிய பாகுபலி 6௦௦ கோடி  ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது இதேபோல் பாகுபலி2 மக்களிடையே பெரும் எதிர்பரர்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 28 அன்று பாகுபலி 2 வெளிவருகிறது. கோடைக்கால விடுமுறை சமயத்தில் படம் வெளிவருவதால் முதல் பாகத்தை விடவும் அதிகம் வசூலிக்கும் என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

 இந்நிலையில், மார்ச் 16-ம் தேதி மாலை 5 மணிக்கு இணையத்தில் டிரைலர் பாகுபலி 2 வெளியிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ஆனால், தமிழ் டிரைலர் மட்டும் இணையத்தில் கசிந்தது. இதனை வாட்ஸ் – அப் மற்றும் சமூகவலைத்தளத்தில் அனைவரும் பகிர்ந்து வந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து  அதிகாரப்பூர்வமாக அனைத்து மொழி டிரைலர்களையும் படக்குழு வெளியிட்டது .   பாகுபலி 2 -தமிழ் தெலுங்கு, ஹிந்தி, , மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

மேலும் டிரைலர் வெளியானதை அடுத்து மக்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பதும்  குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top