ஐநா நடத்தும் தமிழர்களுக்கு எதிரான ஜனநாயக படுகொலை;இலங்கைக்கு கால நீடிப்பு

 

timthumb

2009ஆம் ஆண்டு இனப்படுகொலையை விட மிக மோசமான படுகொலை ஜனநாயகம் என்ற பெயரிலும், ஐநா சபை என்ற பெயரிலும், மனித உரிமை ஆணையம் என்ற பெயரிலும் தமிழருக்கெதிராக நடந்தேறிக்கொண்டிருக்கிறது. நாம் என்ன செய்யப்போகிறோம்.

ஒன்றரை லட்சம் மக்களை கொலை செய்துவிட்டு இலங்கை அதன் இரத்தகறையை சர்வதேச நாடுகளுடன் சேர்ந்து ஒவ்வொரு வருடங்களும் கழுவிக்கொண்டே வருகிறது. பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிலையோ அதள பாதாளத்தை நோக்கி போய்க்கொண்டிருக்கிறது.

இலங்கை தண்டிக்க போகிறோமென்று நாடகம் ஆடி நாடகம் ஆடியே இலங்கையை சர்வதேச மட்டத்திலிருந்து தப்புவித்துக்கொண்டிருக்கிறது இந்தியா அமெரிக்கா இங்கிலாந்து போன்ற நாடுகள் இதனைதான் 2012 தீர்மானம் என்ற பெயரில் அமெரிக்கா கொண்டுவந்த போதிலிருந்து மே17 இயக்கம் சொல்லிவருகிறது.இன்று அதுதான் நடந்திருக்கிறது.

2015ஆம் ஆண்டு இலங்கையின் ஓப்புதலோடு அமெரிக்கா ஐநா அவையில் கொண்டுவந்த தீர்மானத்தை ஏற்கனவே அமெரிக்கா தனது நலனை கருத்தில்கொண்டு அந்த அறிக்கையின் இறுதி வரைவை ஒன்றரை ஆண்டுகள் தள்ளி வெளியிட அழுத்தம் கொடுத்து அதனை சாதித்தும் கொண்டது. இந்த வாய்ப்பை இலங்கை அரசு தன் மேலுள்ள இனப்படுகொலை கறையை கழுவிக்கொள்ள பயன்படுத்தியது.

இந்த நிலையில் தற்போதைய கூட்டத்தொடரில் அந்த 2015தீர்மானம் மீதான இறுதி அறிக்கையை ஐநா வெளியிடுமென்று தமிழர்கள் நினைத்த நேரத்தில் தான். நேற்று அமெரிக்கா, இங்கிலாந்து, வட அயர்லாந்து, மசிடோனியா போன்ற நாடுகள் ஐநா சபையில் புதிய தீர்மானமொன்றை தாக்கல் செய்திருக்கிறார்கள்.அதில்

1.இலங்கை அரசுக்கு 2019வரை மேலும் காலநீடிப்பு கொடுப்பதென்றும்,

2.ஏற்கனவே 2015 தீர்மானத்திலிருந்த பொதுநலவாய மற்றும் ஏனைய வெளிநாட்டு நீதிபதிகள், பாதுகாப்புச் சட்டத்தரணிகள், அங்கிகாரமளிக்கப்பட்ட வழக்குத் தொடருநர்கள், புலனாய்வாளர்கள் ஆகியோர், இலங்கையின் நீதிப் பொறிமுறையில் பங்கெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாகக் கூறப்பட்டிருந்தது. ஆனால் இந்த புதிய வரைவு தீர்மானத்தில் ’’இலங்கை அரசின் சம்மதத்துடன்’’ என்ற ஒரு வாசகத்தை சேர்த்துள்ளார்கள். இதன் மூலம் இலங்கை அரசு சம்மதம் சொன்னால் மட்டுமே மேற்கொண்ட விசாரணையே நடைபெறும் என்று இனப்படுகொலையை முற்றிலும் மூடி மறைத்துவிட்டார்கள்.

இப்படிப்பட்ட மோசமான ஒரு தீர்மானத்தை தான் மேற்சொன்ன நாடுகளின் ஆதரவுடன் வரும் 23ஆம் தேதி ஐநா மனித உரிமை அவையில் நிறைவேற்றப்பட இருக்கிறது. இதனை எதிர்த்து தமிழர்கள் இப்போது போராடமல் விட்டால் பின் எப்போதும் நமக்கான நீதி கிடைக்காது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top