5 மாநில சட்டப்பேரவை தேர்தல், மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு சாத்தியமில்லை: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

 

election

 

5 மாநில சட்டப்பேரவை முடிவுகளை அடுத்து மாயாவதிமற்றும்கேஜ்ரிவால் ஆகியோர் மின்னணு வாக்குப்பதிவு எந்திர முறைகேடு பற்றி புகார் எழுப்பிய நிலையில், எந்திரத்தை முறைகேடு செய்யச் சாத்தியமில்லை என்று தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையம் புகார்களை மறுத்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்தகைய குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை, கற்பனையானவை, தாறுமாறான இத்தகைய புகார்கள் ஒதுக்கத் தகுதியானவையே” என்று கூறப்பட்டுள்ளது.

“மின்னணு வாக்கு எந்திரம் அறிமுகமான காலக்கட்டத்திலிருந்து இத்தகைய புகார்கள் எழுப்பப்பட்டு வந்து அவற்றை உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் நிராகரித்தே வந்துள்ளன. காரணம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை முறைகேடு செய்ய முடியாது என்பதே.

மேலும், இதுவரை ஒருவரும் முறைகேடு செய்யக்கூடியதே என்பதை பருமையான ஆதாரங்களுடன் நிரூபிக்கவுமில்லை” என்று அந்த அறிக்கையில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்திய எலக்ட்ரானிக் கார்ப்பரேஷன், பாரத் எலக்ட்ரானிக்ஸ் ஆகிய பொதுத்துறை நிறுவனங்களே மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தை தயாரித்துக் கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top