மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்கள் 1,362 ஆக உயர்வு.

mbbs

மருத்துவ பட்ட மேற்படிப்பு இடங்களின் எண்ணிக்கை 1,362 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

தமிழக அரசின் 2017- 2018 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மீன்வளம், நிதி, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

பட்ஜெட் உரையை வாசித்த அமைச்சர் ஜெயக்குமார், ”தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளில் 4 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே இருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. போதுமான தகுதி வாய்ந்த டாக்டர்களின் இருப்பு எண்ணிக்கை உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2011-ம் ஆண்டில் 1,945 ஆக இருந்த எம்பிபிஎஸ் இடங்களின் எண்ணிக்கை, 2016-17-ம் ஆண்டுல் 2,750 ஆக உயர்ந்துள்ளது. இந்த அரசு எடுத்த முயற்சியின் விளைவாக, 2016-17-ம் ஆண்டில் 1,188 ஆக இருந்த மருத்துவ பட்டமேற்படிப்பு இடங்களின் எண்ணிக்கை 2017-18-ம் ஆண்டில் 1,362 ஆக உயர்த்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top