மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும்

மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது நமது கடமையாகும். அதற்காக, பின்வரும் அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது:-

• மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் இணைப்புச்சக்கரங்கள் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை ஆண்டு ஒன்றிற்கு 1,000 லிருந்து 2,000மாக உயர்த்தப்படும். இதற்கென 11.97 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

• பார்வைத்திறன் குறைபாடுடையோர் மற்றும் கை, கால் ஊனமுற்றோருக்கு வழங்கப்பட்டு வரும் 1,000 ரூபாய் மாதாந்திரப் பயணப்படியானது செவித்திறன் குறைபாடுடைய அரசுப் பணியாளர்களுக்கு விரிவுபடுத்தப்படும்.

• 2017-2018ஆம் ஆண்டில் 3.16 கோடி ரூபாய் செலவில், பார்வைத்திறன் குறைபாடு உள்ள 10,000 நபர்களுக்கு உயர் தொழில்நுட்ப ஊன்றுகோல்கள் வழங்கப்படும்.

• தசைச்சிதைவு மற்றும் பக்கவாதத்தால் கை, கால் பாதிக்கப்பட்ட 1,000 நபர்களுக்கு 6.50 கோடி ரூபாய் செலவில் மோட்டார் பொருத்தப்பட்ட நகரும் வண்டிகள் முதன் முறையாக வழங்கப்படும்.

 • 2017-2018 ஆம் ஆண்டில், அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த 10,000 மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில், 5 கோடி ரூபாய் செலவில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும்.

• சென்னை மற்றும் சிவகங்கையில் 3.31 கோடி ரூபாய் செலவில், புதிதாகப் பிறந்த குழந்தைகளின் செவித்திறன் குறைபாட்டைக் கண்டறியும் ஒரு முன்னோடித் திட்டம் தொடங்கப்படும்.

• மாணவ, மாணவியருக்கு நான்கு சீருடைத்தொகுப்புகள், புத்தகப்பைகள், காலணிகள், பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் மற்றும் வடிவியல் பெட்டிகள் உள்ளிட்ட கல்வி கருவிகளையும், மிதிவண்டிகள் மற்றும் பேருந்துக் கட்டணச் சலுகைகள் போன்றவற்றையும் இந்த அரசு விலையில்லாமல் தொடர்ந்து வழங்கும்.

• 2017-2018 ஆம் ஆண்டின் வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மேற்கூறிய நலத்திட்டங்களுக்காக, 1,503 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 2017-2018 ஆம் ஆண்டு வரவு-செலவுத்திட்ட மதிப்பீடுகளில் மடிக் கணினிகள் வழங்குவதற்காக 758 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top