குற்றம்சாட்டுவதை சேரன் நிறுத்திக்கொள்ளவேண்டும்;மிஷ்கின் தாக்கு.

 

miskin1

 

நடிகர் விஷால் மீது குற்றம்சாட்டுவதை சேரன் நிறுத்திக்கொண்டு படம் எடுப்பதில் கவனம் செலுத்தம் வேண்டும் என திரைப்பட இயக்குனர் மிஷ்கின் கூறியுள்ளார்.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்  நடத்தும் அதிகாரியாக, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி திரு.சிவசுப்பிரமணியம் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் போட்டியிடும் விஷால் அணியினர் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய இயக்குநர் மிஷ்கின், மூத்த தயாரிப்பாளரான சேரன் தனி மனித தாக்குதலில் ஈடுபடுவது ஏன்? என கேள்வி எழுப்பினார். மேலும், சேரன் மீதும் குற்றச்சாட்டுகள் உள்ளதாகவும், அதனை தெரிவிக்க விரும்பவில்லை என்றும் மிஷ்கின் குறிப்பிட்டார்.

இதைத் தொடர்ந்து பேசிய நடிகர் விஷால், 10 ஆண்டுகளாக தயாரிப்பாளர்களின் நலனுக்காக குரல் கொடுத்தும் எவ்வித முன்னேற்றமும் இல்லாத காரணத்தால் தான், தாம் இத்தேர்தலில் போட்டியிடுவதாக கூறினார்.

தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ள பதவிகளுக்கு நடிகர் விஷால் தரப்பில் ஒரு அணியும், கலைப்புலி தாணு தரப்பில் மற்றோரு அணியும்  உள்ளர்னர் என்பது குறிபிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top