காஸ்மீரில் இந்திய இராணுவம் அத்துமீறல்; இரண்டு குழந்தைகள் பலி

 

kasmir2

காஸ்மீர் குப்வார [Kupwara] மாவட்டத்தில் உள்ள ஜக்தியால் பகுதிக்குள் அத்துமீறி புகுந்த இந்திய இராணுவம்., காஷ்மீரிகளின் விடுதலைக்காக போராடி கொண்டிருக்கும் தோழர்கள் தங்கியிருந்த வீட்டின் மீது எந்தவொரு முன்னறிவிப்புமின்றி தனது துப்பாக்கி தாக்குதலை நடத்தியது.

இந்த திட்டமிட்ட துப்பாக்கி தாக்குதலில் கிட்டத்தட்ட 3 தோழர்களை இந்திய இராணுவத்தினர் கொடூரமாக சுட்டு கொலை செய்துள்ளனர்.

இந்திய இராணுவத்தின் இந்த திட்டமிட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில்
வெறும் 100 மீட்டர் தொலைவில் இருந்த கநீஸா என்னும் சிறுமி சுட்டு கொல்லப்பட்டுள்ளார், பைசல் என்னும் சிறுவன் துப்பாக்கி குண்டு காயம் பட்டு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறான்.

படுகொலை செய்யப்பட்ட சிறுமியின் வயது 6,
குண்டு காயம் பட்ட சிறுவன் இன்னும் 15 வயதை கூட தாண்டாதவன்.

kasmir1

இந்திய அகிம்சை தேசத்தின் ஒடுக்குமுறைக்கு எதிராக ஒரு கல்லை கூட வீசாத இந்த சிறுமியை திட்டமிட்டு இனப்படுகொலை செய்வதுதான் உலகத்தின் ஆகச்சிறந்த தேசிய வாதமா? என்று முகநூலில் இந்திய தேசியத்தின் அகிம்சை என்கிற போலி முகத்தை கிழித்து கொண்டிருக்கிறார்கள்

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top