சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவர் பதவியிலிருந்து ;சஷாங் மனோகர் விலகியுள்ளார்.

 

ICC

 

ஐசிசி தலைவர் பதவியை சஷாங் மனோகர் ஏற்று 8 மாதங்கள்தான் குறிப்பிடத்தக்கது. பிபிசிஐ என்றழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவரான சஷாங் மனோகர், ஐசிசி அமைப்பின் சுய அதிகாரம் பெற்ற முதல் தலைவராக பதவி வகித்தார்.

தான் பாரபட்சமின்றியும், நேர்மையாகவும் நடந்து கொள்ள முயற்சித்ததாக ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ள சஷாங் மனோகர், சொந்த காரணங்களால் தன்னால் ஐசிசி தலைவர் பதவியில் தொடர இயலவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2016-ஆம் ஆண்டு மே மாதத்தில், ஐசிசி தலைவர் பதவிக்கு போட்டியின்றி இரண்டு ஆண்டு காலத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மனோகர், இங்கிலாந்து மற்றும் வேல்ஸ், ஆஸ்திரேலியா , இந்தியா ஆகிய மூன்று பெரிய கிரிக்கெட் வாரியங்களின் ஆதிக்கத்தை குறைக்க முயற்சித்து ஐசிசி அமைப்பில் சீர்திருத்தம் கொண்டு வர உத்திகள் மேற்கொண்டார் என்பது  குறிபிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top