திடீர் தீ விபத்தில் நூற்றுக்கணக்கான செம்மரங்கள் எரிந்து நாசம்;திருப்பதி வனப்பகுதி.

redwood_20

 

செம்மரம் வெட்டுவதாக நாள்தோறும் தமிழர்களை ஆந்திர போலீஸார் கைது செய்துவரும் நிலையில் ஆந்திர வனப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தால் நூற்றுக்கணக்கான செம்மரங்கள் தீக்கிரையாகியுள்ளன
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள திருப்பதி வனப் பகுதியில் நேற்று மதியம் மின்னல் ஏற்பட்டு, தீ விபத்து ஏற்பட்டது. வனப்பகுதியில் மளமளவன பரவிய தீயினால்  50 ஏக்டர் பரப்பளவில் உள்ள அரிய வகை மரங்களும், வன உயிர் இனங்களும் பலவும் தீக்கு இறையாகின.  மேலும் இப்பகுதியில் அதிகளவில் காணப்படும் நூற்றுக்கணக்கான செம்மரங்களும்  தீயில் எரிந்து சாம்பலாயின.

வாகனங்கள் செல்ல முடியாத அடர்ந்த வனப் பகுதிக்குள்  ஏற்பட்டதால், தீயை அணைப்பதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டதாகவும் எனினும், 8 மணி நேரம் போராடி தீயை அணைத்துள்ளதாக அம்மாநில தீயணைப்புத் துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top