இலங்கை கடற்படை மீது நடவடிக்கை: நாடாளுமன்றத்தில் சசிகலா அதிமுக வலியுறுத்தல்

 

www.villangaseithi.com_-33

 

தமிழக மீனவர் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தில் இலங்கை கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் சசிகலா -அதிமுக உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

கச்சத்தீவு அருகே, இலங்கை கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் தமிழக மீனவர் ஒருவர் உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி கோரியிருந்தார். மீனவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பகுதி நேற்று தொடங்கியது. மக்களவையில் பூஜ்ஜிய நேரத் தின்போது அதிமுக உறுப்பினர் பி.வேணுகோபால் இந்தப் பிரச்சினையை எழுப்பினார். அப்போது அவர் பேசும்போது, “பரஸ்பரம் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தக்கூடாது என இந்தியா, இலங்கை இடையே உடன்பாடு உள்ளது. இதை மீறி இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது அதிகரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும்” என்றார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top