இந்திய ராணுவம் துப்பாக்கி சூடு;காஸ்மீர் விடுதலைப் போராளிகள் இருவர் பலி

 

kasmir

காஸ்மீர் புல்வாமா மாவட்டத்தின் அவன்திபோரா  பகுதியில் உள்ள ‘பட்காம்போரா’ கிராமத்திற்குள் திடீரென புகுந்த இந்திய இராணுவத்தினர் அந்த பகுதி முழுவதையும் சுற்றி வளைத்து தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தனர்.ஒவ்வொரு வீடாக சென்று வீட்டில் உள்ளவர்களை வெளியே இழுத்து போட்டனர்

 

பின் ஒரு வீட்டிற்குள் சென்று அங்கு தங்கியிருந்த இளைஞர்கள் மீது எந்தவித முன்னறிவிப்புமின்றி துப்பாக்கி சூடு தாக்குதலை நடத்த தொடங்கியது இந்திய இராணுவம்.

kasmir2

இந்திய இராணுவத்தின் இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் காஷ்மீரின் விடுதலைக்காக போராடி கொண்டிருக்கும் காஸ்மீர் விடுதலை போராளிகள் இரண்டு பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

 

இந்திய இராணுவத்தினர் காஷ்மீரிகளின் மீது தொடர்ந்து நடத்தி வரும் இனப்படுகொலையை கண்டித்து அந்த பகுதி மக்கள் அனைவரும் ஒன்றுகூடி இந்திய ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை நடத்தினர்.

kasmir3

அப்படி போராட்டம் நடத்திய அந்த கிராமத்தை சேர்ந்த அப்பாவி பொது மக்களின் மீதும் துப்பாக்கி சூடு தாக்குதலை நடத்தியுள்ளது காந்திய தேசத்தின் இராணுவம்
இப்படி அப்பாவி மக்களின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில்  மற்றும் பெல்லட்ஸ் குண்டுகள்  தாக்குதலிலும்  பள்ளியில் படித்து கொண்டிருக்கும் 15 வயதே ஆன மாணவன் அமிர் நாசிர் என்பவரும் 22 வயது இளைஞர் ஜலாயுதீன் என்பவரும் சுட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
பல்வேறு மக்கள் பெல்லட்ஸ் மற்றும் துப்பாக்கி குண்டுகள் ஏற்படுத்திய பலத்த காயத்தோடு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்திய இராணுவம் சுட்டு கொன்ற 15 வயதே ஆன மாணவனின் இறுதி ஊர்வலத்தின் 1000 க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு,
இந்திய இனப்படுகொலைக்கு எதிராகவும் காஷ்மீரிய விடுதலையை வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top