பாஜக வின் வலையில் வீழ்த்தது அதிமுக சங்கர மடத்துக்கு ரகசியமாக வந்த டி.டி.வி.தினகரன்

 

-jayant

 

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா மரணம் அடைந்த பின்னர் அதிமுக வில் பல சலசலப்புகள் ,அதிகாரத்தை பிடிக்க போட்டி என தினசரி ஒரு நிகழ்வு நடைபெற்றது நினைவு இருக்கலாம்.பன்னீர்செல்வத்திற்கு பாஜக வின் ஆதரவு இருந்ததால் சசிகலாவை எதிர்க்க மீடியா பலவும் ஆட்கள் பலமும் பெற்றார். சசிகலா கட்சியை கைப்பற்றியதால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அதிகம் பேர் சசிகலா பக்கமே இருந்தனர்.மத்திய அரசு ஆதரவு இருந்தும் பன்னீர் செல்வத்தால் ஆட்சியை தக்கவைக்க முடியவில்லை.சசிகலா சிறைவாசம் செல்ல எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆனார்.டிடிவி தினகரன்  அதிமுக துணைப் பொதுச்செயலர் ஆனார்.

இந்த சூழலில் அதிமுக அரசு நீடித்து இருக்கவும், சசிகலா மீதுள்ள வழக்குகளுக்கான மேல்முறையீட்டுக்கு செல்லவும் மத்திய அரசின் ஆதரவு தேவைபடுகிறது.மத்திய அரசுக்கும் மாநிலத்தில் தம் கட்சியை வலுபடுத்த மாநில  அரசின்  ஆதரவும் தேவைப்படுகிறது.இதற்க்கான பேச்சு வார்த்தையை எப்படி துவங்குவது என்று இருகட்சிகளும் யோசித்துக்கொண்டிருந்த போது திடீரென  அதிமுக துணைப் பொதுச்செயலர் டி.டி.வி.தினகரன் நேற்று சங்கரமடம் வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது

கட்சியினர் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் ரகசியமாக திடீரென வந்த அவர் 5 நிமிடம் மட்டுமே அங்கிருந்துவிட்டு திரும்பிச் சென்றார்.

சங்கரமடம் வந்த டி.டி.வி.தினகரனின் பயணம் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. கட்சியினருக்கோ, செய்தியாளர்களுக்கோ தகவல் தெரிவிக்கப்படவில்லை.

இதுகுறித்து அறிந்த செய்தியாளர்கள், போலீஸார் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியது:

தினகரன் சங்கர மடம் வருவது எங்களுக்கே கடைசி நேரத்தில்தான் தெரிந்தது. அவர் மடத்துக்குச் சென்று ஜெயேந்திரரை சந்தித்தார். விஜயேந்திரரை சந்தித்தாரா இல்லையா என்ற விவரம் தெரியவில்லை. அவர் உடனடியாக மடத்தில் இருந்து வெளிவந்து சென்னை சென்றுவிட்டார். போலீஸ் பாதுகாப்பு உள்பட எதுவும் கேட்கப் படவில்லை. அவருடன் ஓரிருவர் மட்டுமே வந்தனர் என்றனர்.

இது தொடர்பாக சங்கர மடத்தில் கேட்டபோது தினகரன் என்ற முக்கிய பிரமுகர் ஒருவர் வந்தார். அவர் அதிமுக துணைப் பொதுச் செயலர் தினகரனா என்பது தெரியாது. அவர் இங்கு யாருடனும் எந்த ஆலோசனையிலும் ஈடுபடவில்லை. பெரியவரிடம் ஆசிபெற்றுவிட்டு சென்றுவிட்டார் என்றனர்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top