ஆதிவாசிகளுக்கு ஆதரவாக வேலை செய்த பேராசிரியர் மற்றும் மாணவர்களுக்கு ஆயுள் தண்டனை!

 

g-n-saibaba

ஆந்திர மாநிலம் அமலாபுரத்தில் பிறந்தவர் ஜி.என்.சாய்பாபா (50). மாற்றுத்திறனாளியான இவர் , முனைவர் பட்ட பெற்றவர். 2003-ல் டெல்லி பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 2009-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட, மாவோயிஸ்டுகளுக்கு எதிரான பசுமை வேட்டையை கடுமையாக எதிர்த்தவர்களில் சாய்பாபாவும் ஒருவர்.

இந்த பசுமை வேட்டைக்கு எதிராக, ‘மக்களுக்கு எதிரான போரை எதிர்க்கும் அமைப்பு’ உருவானது. இதை தேசிய அளவில் ஒருங்கிணைப்பதில் சாய்பாபா முக்கிய பங்கு வகித்தார். இதற்காக, பசுமை வேட்டை நடைபெற்ற பகுதிகளுக்கு நேரில் சென்று பாதிக்கப் பட்ட ஆதிவாசிகளுக்கு உதவினார்.நாடு முழுவதும் பசுமை வேட்டைக்கு எதிராக பிரச்சாரம் வலுபெற்றது.காடு ஆதிவாசிகளுக்கு வாழ்க்கையின் ஆதாரமாக இருப்பது,அதை கார்பரேட்களுக்கு அரசு தாரை வார்ப்பது கண்டிக்கத்தக்கது.என்று ஆதிவாசிகளுக்கு சார்பாக குரல் கொடுத்தார் அவர்களோடு படித்த, நாட்டின் இயற்கை வளங்களின் மீது அக்கறை கொண்ட பேராசிரியர்களும் மாணவர்களும் பிரச்சாரத்தில் பங்கெடுத்தார்கள்.

இது, ஆளும் அரசுக்கு மிகவும் இடையுறாக இருந்தது.கார்பரேட் கம்பெனிகளுக்கு எதிராக இவரது செயல்கள் இருந்ததால் அரசு இவர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்தது.இவரோடு இணைந்து பணியாற்றிய ஆதிவாசிகளுக்கு ஆதரவாக வேலைசெய்த ஜவாஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர்களான ஹெம் மிஸ்ரா, மகேஷ் திர்கே மற்றும் பாண்டு நரோட்டி ஆகியோர் கட்சிரோலி மாவட்டம் அஹேரியில் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டனர்.மேலும்,  பிரசாந்த் ரஹி மற்றும் விஜய் திர்கே ஆகிய இருவரும் கொண்டியா மாவட்டம் தியோரியில் கைது செய்யப்பட்டனர்.

 

article-2-point-5

இவர்கள் அனைவர் மீதும் மாவோயிஸ்டுகளுக்கு துணையாக இருந்தனர் என்று பொய் வழக்கு போடப்பட்டு கட்சிரோலி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

அப்போது, “இந்திய தண்டனை சட்டத்தின் 120பி மற்றும் சட்ட விரோத செயல் தடுப்பு சட்டத்தின் 13, 18, 20, 38, 39 ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த 6 பேர் மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே இவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கிறேன்” என நீதிபதி தெரிவித்தார்.

இதில் சாய்பாபா உட்பட 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. விஜய் திர்கேவுக்கு மட்டும் 6 ஆண்டு தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்

மக்களுக்காக போராடும் பேராசிரியர்களுக்கும்,இயற்கையை காக்க நினைக்கும் மாணவர்களுக்கும் அரசு கொடுக்கும் பட்டம் ‘தேசவிரோதி’ .வருங்கால இளைஞர்களுக்கு நாட்டுக்காக சேவைசெய்ய வேண்டும் என்ற  எண்ணம் வராமல் இருக்கவும் அப்படியே வந்தால் அதை  இந்த அரசுகள் கொச்சைப்படுத்தவும் தயாராகிவிட்டது. இளைஞர்கள் இனி  வெறும் குமாஸ்தாக்களாக மட்டும் உருவாக வேண்டும் அதுவும் கார்பரேட் கம்பெனிகளுக்கு வேலை செய்யும்  குமாஸ்தாக்களாக என்பதே இந்த அரசுக்களின் வேலையாக இருக்கிறது அதற்கு நீதிமன்றத்தையும்  துணையாக்கிக் கொள்கிறது!

பேராசிரியர் சாய்பாபா இலங்கையில் தமிழீழ மக்கள் கொத்துக்கொத்தாக இனப்படுகொலை செய்யப்பட போது  போரை தடுத்து நிறுத்த குரல் கொடுத்தவர்.தமிழீழத்திற்கு ஆதரவு கொடுத்தவர் என்பது முக்கியமானது

 


கருத்துக்களை பகிர


அல்லது

One comment

  1. http://www.ylzx00.com/comment/html/index.php?page=1&id=58247

    You’ve one of the greatest internet websites. http://www.ylzx00.com/comment/html/index.php?page=1&id=58247

Your email address will not be published.

Scroll To Top