வங்கிகளில் 4 தடவைக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.150 கட்டணம் என்பது பிற்போக்குத்தனம்: ப.சிதம்பரம்

 

ulimited-operations-showcase_image-9-a-7063

4 தவணைகளுக்கு மேல் பணம் எடுத்தால் ரூ.150 கட்டணம் என்பது பிற்போக்குத்தனம் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மக்களிடையே ரொக்கப் பண பரிவர்த்தனையை குறைத்து மின்னணு பரிவர்த்தனையை அதிகரிக்க செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக வங்கிகளில் மாதத்துக்கு 4 தடவைக்கு மேல் பணம் எடுத்தாலோ அல்லது செலுத்தினாலோ கட்டணம் வசூலிக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த புதிய திட்டத்தின்படி மாதத்துக்கு 4 தடவைக்கு மேல் பணம் எடுத்தாலும், செலுத்தினாலும் ரூ.150 கட்டணம் வசூலிக்கப்படும். எச்.டி.எப்.சி., ஐ.சி.ஐ.சி.ஐ., ஆக்சிஸ் உள்பட சில வங்கிகளில் இது நடைமுறைக்கு வந்துள்ளது

இதற்கு மக்களிடையே எதிர்ப்பும், அதிருப்தியும் எழுந்துள்ளது. இது தொடர்பாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

பணம் எடுப்பதற்கும், பணம் போடுவதற்கும் வங்கிகள் கட்டணம் வசூலிப்பது என்பது பிற்போக்குத்தனமான நடவடிக்கையாகும். வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களது பணத்தை முழுமையாக எடுத்துச் சென்று விட்டால் வங்கிகள் மகிழ்ச்சி அடையுமா?

இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top