2-வது டெஸ்ட்: புஜாரா, ரகானே ஆட்டத்தால் இந்தியா 126 ரன் முன்னிலை

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 189 ரன்கள் சேர்த்தது. நாதன் லயன் 8 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார். அதன்பின் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 276 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா 6 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

87 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இந்தியா 3-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் இன்னிங்சில் 90 ரன்கள் குவித்த லோகேஷ் ராகுல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 51 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த கோலி (15), ஜடேஜாவை (2) ஹசில்வுட் வெளியேற்ற, 120 ரன்கள் எடுப்பதற்குள் இந்தியா 4 விக்கெட்டுக்களை இழந்தது.

5-வது விக்கெட்டுக்கு புஜாராவுடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் மூன்று இன்னிங்சில் வெளிப்படுத்திய மோசமான ஆட்டத்தை மறந்து அணியை காப்பாற்றும் வகையில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

இந்தியா – ஆஸ்திரேலியா, 2-வது கிரிகெட் டெஸ்ட், பெங்களூர் ,புஜாரா, ரகானே ,இந்தியா முன்னிலை

-2nd-Test-
புஜாரா 125 பந்துகளை சந்தித்து அரைசதம் அடித்தார். அவருடன் ரகானே சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த 3-வது நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் ஏதும் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

இன்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் சேர்த்துள்ளது. புஜாரா 79 ரன்களுடனும், ரகானே 40 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். தற்போது வரை இந்தியா 126 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.

நாளை காலை தாக்குப்பிடித்து விளையாடி 200 ரன்களுக்கு மேல் முன்னிலைப் பெற்றால், ஆட்டத்தை தங்கள் பக்கம் சாதகமாக திருப்ப இந்தியாவிற்கு வாய்ப்பு ஏற்படும். இந்திய அணி ஆதிக்கம் செலுத்த வேண்டுமென்றால் தற்போது 93 ரன்கள் குவித்துள்ள புஜாரா – ரகானே ஜோடி இன்னும் 100 ரன்கள் சேர்க்க வேண்டும். அந்த பொறுப்பு அவர்கள் கையில் உள்ளது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top