ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்; பசுமை தீர்ப்பாயத்தில் மதிமுக வை சேர்ந்தவர் மனு

தென்மண்டல் பசுமை தீர்பாயத்தில் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தென்மண்டல் பசுமை தீர்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹட்ரோ கார்பன் எடுக்கு திட்டத்திற்கு அனுமதி அளித்த மத்திய அரசை கண்டத்து கிராம மக்கள், மாணவர்கள் என தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

neduvasal-pro

இந்த திட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து, அந்தந்த கட்சி சார்பில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் இந்த திட்டத்தை கைவிடுமாறு பிரதமர் ,பெட்ரோலியத்துறை மற்றும் வேளாண் துறை அமைச்சர்களுக்கு கடிதமும் எழுதி வருகின்றனர்.

 

போராட்டத்திற்கு அதரவு தெரிவிக்கும் விதமாக, டெல்லியிலும் தமிழ் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். ஒரு பக்கம்  அதிமுக உட்கட்சி பூசலினால் அரசு இயந்திரம் செயல் இழந்துள்ளது என்றும் மறுபக்கம் மத்திய அரசு தமிழர்களுக்கு துரோகம் விளைவித்து வருகிறது என்றும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வரிகின்றனர்.

 

இந்நிலையில் நெடுவாசல் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று தென்மண்டல் பசுமை தீர்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டையின் வடக்கு மாவட்ட நெடுவாசல் பாசன விவசாயிகள் நல சங்க தலைவரும், மதிமுக ஒன்றிய செயலாளர் செல்வராஜ் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.

 

அந்த மனுவில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு தடைவிதிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது போல் ஹைட்ரோ கார்பன் பேன்ற திட்டத்தை செயல்படுத்தும் போது போதிய விதிமுறைகள பின் பற்ற வேண்டும். ஆனால் நெடுவாசலில் இது பின்பற்றவில்லை. அதன்பின் நெடுவாசல் மட்டுமில்லாமல் அதனைச் சுற்று இருக்கும் பகுதிகளை வேளான் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க கோரியும் அந்த மனுவில் அவர் கோரியுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை விரைவில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top