தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மழை பெய்யும்

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் காரைக்கால் உள்பட பல இடங்களில் கோடை மழை பெய்து இருக்கிறது. புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் அதிக பட்சமாக 17 செ.மீ.மழை பெய்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

கோடை காலம் மார்ச் 1-ந்தேதி தொடங்கி உள்ளது. ஆனால் கடும் கோடை ஏப்ரல் மே மாதங்கள்தான். இந்தநிலையில் குமரிக்கடல் முதல் தமிழகத்தின் வழியாக மத்தியபிரதேசம் வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளது. இது அடுத்து 2 நாட்களுக்கு இருக்கும்.

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களிலும், கோவை உள்ளிட்ட உள்மாவட்டங்களிலும் இன்றும் (திங்கட்கிழமை) நாளையும் (செவ்வாய்க்கிழமை) சில இடங்களில் மழை பெய்யும். அதாவது லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யும். சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழை பெய்யும். இது கோடைமழை ஆகும்.

இவ்வாறு எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர மழை அளவு வருமாறு:-

காரைக்கால் 17 செ.மீ., நாகப்பட்டினம் 9 செ.மீ., வேதாரண்யம் 8 செ.மீ., மயிலாடுதுறை, திருப்பத்தூர், பேரையூர், பரமக்குடி தலா 4 செ.மீ., வத்திராயிருப்பு, உசிலம்பட்டி, திருக்கோவிலூர் தலா 3 செ.மீ., நன்னிலம், கமுதி, ஆடுதுறை, திருத்தணி, திண்டிவனம், ஸ்ரீவில்லிபுத்தூர் தலா 2 செ.மீ., தரங்கம்பாடி, கொடைக்கானல், திருமங்கலம், திருவிடைமருதூர், மதுக்கூர், பொள்ளாச்சி, பெரியகுளம், சேலம், சிவகங்கை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, உத்தமபாளையம், அதிராம்பட்டினம், ஆண்டிப்பட்டி, விளாத்திக்குளம், குடவாசல், வால்பாறை, தேவகோட்டை, நடுவட்டம் தலா 1 செ.மீ.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top