இந்திய ராணுவ அதிகாரிகளை விமர்சித்த ராணுவ வீரன் மர்ம மரணம்;மீண்டும் பிரேத பரிசோதனை

 

body-of-jawan-after-family-raises_SECVPF

 

ராணுவ அதிகாரிகள் தங்களின் கீழ் பணிபுரியும் வீரர்களை நடத்தும் விதத்தை செய்தி நிறுவனம் ஒன்று சமீபத்தில் ‘ஸ்டிங் ஆபரேஷன்’ எனப்படும் ரகசிய நடவடிக்கை மூலம் பதிவு செய்தது. அப்போது அதிகாரிகளால் தாங்கள் படும் வேதனைகளை கேரள மாநிலம் கொல்லத்தை சேர்ந்த ராய் மேத்யூ என்ற வீரர் செய்தியாளரிடம் விளக்கினார்.

இந்த புகார்களை கூறிய ராணுவ வீரர் ராய் மேத்யூ கடந்த 25-ந் தேதி மாயமானார். அவரை சக வீரர்கள் தேடி வந்த நிலையில், கடந்த 2-ம் தேதி(வியாழக்கிழமை) மும்பை அருகே நாசிக்கின் தியோலாலி கண்டோன்மென்டில் உள்ள பாழடைந்த கட்டிடம் ஒன்றில், தூக்கில் தொங்கிய நிலையில் ராய் மேத்யூ பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.

இந்திய ராணுவ அதிகாரிகள் , ராணுவ வீரன்,மர்ம மரணம்,மீண்டும் பிரேத பரிசோதனை
இன்று காலை அவரது உடல் திருவனந்தபுரத்திலிருந்து விமானத்தில் கொண்டு வரப்பட்டு அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், மேத்யூவின் பாதங்களில் அடித்த தடமும் உடலின் சில இடங்களில் ரத்தக்காயங்களும் இருப்பதாக அவரது மனைவி உள்ளிட்ட உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.

இதனால் மேத்யூவின் உடலை மறுபரிசோதனை செய்திடுமாறு அவரது உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக அவரது மனைவி பினி, கொல்லம் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீசாரிடம் புகார் அளித்தார். பினியின் புகாரைத் தொடர்ந்து தற்போது மேத்யூவின் உடல் வருவாய் கோட்ட அதிகாரி முன்னிலையில், மீண்டும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top