முல்லை பெரியாறு அணையில் துணைக்குழு நேரில் ஆய்வு

முல்லை பெரியாறு அணையில் மத்திய துணை குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். அவர்கள் வல்லக்கடவு வழியாக படகு மூலம் அணைப்பகுதியை பார்வையிட்டனர்.

 

 

sub-committee-to-inspect-mullaperiyar-dam_SECVPF

 
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து அணையை கண்காணித்து பராமரிக்க 3 பேர் கொண்ட குழுவையும் நியமித்தது. மூவர் குழுவின் தலைவராக மத்திய அணைகள் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு குழு தலைமை பொறியாளர் பி.ஆர்.கே. பிள்ளை உள்ளார்.

இந்த குழுவுக்கு உதவியாக மத்திய நீர்வள ஆணையத்தின் செயற்பொறியாளர் அம்பர்ஜி ஹரிஷ் கிரீஸ் நியமிக்கப்பட்டு இருந்தார். இவரது தலைமையில் 5 பேர் கொண்ட துணைக்குழு செயல்பட்டு வந்தது. இதில் தமிழகத்தின் சார்பில் முல்லை பெரியாறு அணையில் செயற்பொறியாளர் மாதவன், உதவி செயற்பொறியாளர் சாம் இர்வின் ஆகியோரும், கேரள பிரதிநிதிகளாக பெரியாறு மைனர் இரிகேசன், செயற்பொறியாளர் ஜார்ஜ் டேனியல், உதவி பொறியாளர் பிரசீது ஆகியோர் உள்ளனர்.

இந்த மத்திய துணைக்குழு கடந்த செப்டம்பர் 9-ந் தேதி அணையின் நீர்மட்டம் 115.20 அடியாக இருந்த போது ஆய்வு செய்தனர். தொடர்ந்து துணைக்குழு தலைவர் அம்பர்ஜி ஹரிஷ் கிரீஸ் பணி இடம் மாறுதல் பெற்று வேறு இடத்துக்கு சென்று விட்டார்.
இதனையடுத்து துணைக்குழுவுக்கு மத்திய நீர்வள ஆணைய செயற்பொறியாளர் அசோக் நியமிக்கப்பட்டு உள்ளார். புதியதாக நியமனம் செய்யப்பட்டு உள்ள அசோக் தலைமையில் தமிழக, கேரள பிரதிநிதிகளை உள்ளடக்கிய துணைக்குழு இன்று பெரியாறு அணைக்கு வந்தனர். அவர்கள் வல்லக்கடவு வழியாக படகு மூலம் அணைப்பகுதியை பார்வையிட்டனர்.

பெரியாறு மெயின் அணை, பேபி அணை, ‌ஷட்டர் பகுதி, கேலரி ஆகிய இடங்களில் தொடர்ந்து ஆய்வு நடத்தினர்.

இதன்பின்னர் மாலையில் தமிழகம் மற்றும் கேரள பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஆலோசனை கூட்டம் நடக்கிறது.

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top