நீட்’ தேர்வை எதிர்கொள்ள தமிழக மாணவர்கள் தயார்: அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் எதிர்ப்பு!

 

sengottaiya

 

மருத்துவ நுழைவுத் தேர்வை (நீட்) எதிர்கொள்ள தமிழக மாணவர்கள் தயாராக இருப்பதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

இதற்கு  பெற்றோர்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது

கோவையில் செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது:

மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக ஏற்கெனவே சட்டம் இயற்றி குடியரசுத் தலைவரின் ஒப்பு தலுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அது தொடர்பாக பிரதமரிடம் தமிழக முதல்வர் பேசியிருக்கிறார். மருத்துவ நுழைவுத் தேர்வை ரத்து செய்வது குறித்து பிரதமர் நரேந்திர மோடிதான் முடிவு செய்ய வேண்டும். மருத்துவ நுழைவுத் தேர்வு பிரச்சினையானது இந்திய அளவிலான பிரச்சினை. நீட் தேர்வை எதிர்கொள்ள தமிழக மாணவர்கள் தயாராக உள்ளனர்.

‘’நீட் தேர்வை எதிர்கொள்ள தமிழக மாணவர்கள் தயாராக இருப்பதாக’’ கூறிய அமைச்சர் செங்கோட்டையனுக்கு மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர் மத்தியிலும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.நீட் தேர்விலிருந்து விலக்கு வாங்குவதற்கு தகுதி இல்லாத இந்த அரசின் அமைச்சர் மாணவர்கள் தயாராக இருப்பதாக கூறுவது கையாலாகததனம் என்கிறார்கள்

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top