கேப்பாபுலவு மக்களின் மண்மீட்புப் போராட்டம் வெற்றி; இலங்கை விமானப்படை. வெளியேறியது

 

 

kepa

 

கேப்பாபுலவு மக்களின் மண்மீட்புப் போராட்டம் வெற்றி பெற்றது.40 ஏக்கர் காணிகளிலிருந்து வெளியேறியது இலங்கை விமானப்படை.

இலங்கையின் வடக்கே தங்களின் நிலம்-காணி உரிமைக்கான போராட்டம் மூன்று வாரங்களுக்கும் மேலாக நடக்கிறது .  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் காத்தான்குடியில் ஆர்பாட்டமும் நடைபெற்றது.பல தரப்பினரும் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் தமிழ் பேசும் மக்களின் காணி உரிமையை வலியுறுத்தும் வகையிலான வாசக அட்டைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி வந்தனர்

 

காணி உரிமை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கேப்பாபுலவு மக்களின் காணியை மீள கையளிப்பது தொடர்பாக அரசாங்கமும் ஜனாதிபதியும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தொடர்ந்து கேட்டுக் கொண்டனர்

 

முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்புலவு பகுதியில் விமானப்படை முகாம் அமைந்துள்ள தங்கள் காணிகள் விடுவிக்கப்பட வேண்டுமென கோரி காணி உரிமையாளர்கள் விமானப்படை முகாம் முன்பாக நடந்த தொடர் போராட்டத்தின் விளைவாக  இன்று 40 ஏக்கர் காணிகளிலிருந்து வெளியேறியது இலங்கை விமானப்படை. 84 குடும்பங்களுக்கு சொந்தமான இக் காணிகளை விமானப்படை ஆக்கிரமித்திருந்தது.மக்களின் தொடர் எழுச்சி போராட்டத்தின் மூலம் கிடைத்திருக்கும் இந்த வெற்றி தமிழர்களுக்கு பெரும் உந்துதலை தரும்.

 

 

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top