‘நீட்தேர்வு விலக்கம்’இன்னும் ஜனாதிபதி ஏன் ஒப்புதல் தரவில்லை? மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி!

 

student-exam

 

இந்த ஆண்டு நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுமா? அல்லது பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண்களின்படி நடைபெறுமா? என்ற குழப்பத்திலிருந்து மாணவர்கள் இன்னும் மீளவில்லை. நீட் தேர்வு உண்டா, இல்லையா? என்பது கூட தெரியாத நிலையில் குழப்பமான மனநிலையில் மாணவர்கள் பிளஸ் டு தேர்வு எழுதுகிறார்கள்

இது குறித்து மத்திய அரசு எந்தவிதமான கவலையும் இல்லாமல்  மாணவர்களின் எதிர்காலத்தை பற்றி கவலை கொள்ளாமல் இருக்கிறது .மாநில அரசு மிகவும் பலவீனமான அரசு. அது  அதிகாரத்தை பிடிக்க போட்ட சண்டையில் மாணவர்களின் எதிர்காலம் பற்றிய  சிந்தனையை  ஒத்திவைத்து விட்டது

.மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு குறித்த குழப்பங்களுக்கு தமிழக அரசு உடனடியாக முடிவு கட்ட வேண்டும். நீட் தேர்வு எழுதுவதற்காக விண்ணப்பம் செய்வதற்கு இன்று கடைசி நாளாகும். கடந்த ஆண்டு தமிழகத்திலிருந்து சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே இத்தேர்வுக்கு விண்ணப்பித்தனர். இந்த ஆண்டு அதை விட சற்று அதிக எண்ணிக்கையில் மட்டுமே மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்கான சட்டத்திற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை அரசு பெற்று விடும் என்ற நம்பிக்கை தான் இதற்கு முக்கியக் காரணமாகும்.

ஆனால், கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் சட்டத்திற்கு இன்று வரை குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்படவில்லை. குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்படவில்லை என்றால், நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காத மாணவர்களால் மருத்துவப் படிப்பில் சேரமுடியாது. விண்ணப்பித்த மாணவர்களிலும் எத்தனை பேர் தகுதி பெறுவார்கள் என்பது தெரியாது.

எனவே நீட் சட்டத்திற்கு விரைவாக குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இதுதொடர்பாக பிரதமரிடம் மனு கொடுக்கப்பட்டு விட்டது; அதனால் நீட் தேர்விலிருந்து விலக்கு பெறும் சட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்து விடும் என முதல்வர் பழனிசாமி கூறியிருகிறார் . இது எந்த அளவு நம்பமுடியும்?

தமிழக அரசு நீட் தேர்வு விலக்கு சட்டம் என்பது மத்திய அரசின் நீட் தேர்வு சட்டத்திற்கு முற்றிலும் மாறுபாடானது. ஆகையால் குடியரசு தலைவருக்கும் பிரதமருக்கும் அதிக அழுத்தம் கொடுக்கவேண்டும்.சும்மா அதிமுக கட்சி உள் சண்டையை பார்த்துக்கொண்டு இருந்தால்,மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியதாகி விடும்

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top