நாகா ஒப்பந்த விவரங்களை பகிரங்கமாக வெளியிட தயாரா?- பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்வி

 

 

rahul1_3138842f

 

நாகா அமைதி ஒப்பந்த விவரங்களைப் பகிரங்கமாக வெளியிடத் தயாரா என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

மணிப்பூர் மாநில சட்டப்பேரவை வரும் 4, 8-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. இதையொட்டி அந்த மாநில தலைநகர் இம்பாலில் ஆளும் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று நடந்த பிரச்சார கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்றார். அங்கு அவர் பேசியதாவது:

கடந்த ஆண்டு ஆகஸ்டில் நாகா தேசிய சோஷலிஸ்ட் கவுன்சிலுக்கும் மத்திய அரசுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. ஆனால் இந்த ஒப்பந்த விவரங்கள் குறித்து பொதுமக்களில் யாருக்கும் எதுவும் தெரியாது. மணிப்பூர் முதல்வருக்குகூட எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

அந்த ஒப்பந்த விவரங்களைப் பொதுமக்களின் பார்வைக்காக இணையதளத்தில் பகிரங்கமாக வெளியிட வேண்டும். அப்போது தான் அமைதி ஒப்பந்தம் மணிப்பூருக்கு பலன் தருமா, தீங்கு விளைவிக்குமா என்பது தெரியவரும்.

 

modinscn-main

 

 

பிரதமர் மோடி பொய்களைப் பரப்பி வருகிறார். சகோதரர்களுக்கு நடுவில் பகைமையை தூண்டி விடுகிறார். பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசுகிறார். முதல்வர் இபோபி சிங் அரசு மீது ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்துகிறார்.காங்கிரஸ் ஆட்சியில் மணிப்பூர் வேகமாக முன்னேறி வருகிறது. எனவே மீண்டும் காங்கிரஸுக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியின் பயணத்துக்கு முன்னதாக, மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நேற்று வெடிகுண்டு மீட்கப்பட்டது.

மணிப்பூர் சட்டப்பேரவைக்கு மார்ச் 4, மார்ச் 8 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து இம்பாலில் ராகுல் காந்தி பிரச்சாரம் செய்ய உள்ளார்.

இந்நிலையில் இம்பால் கிழக்கு மாவட்டத்தில், அதாவது ராகுல் பொதுக்கூட்ட மைதானத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் நேற்று வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. குடியிருப்பு கட்டிடம் ஒன்றின் வாயிலுக்கு அருகிலிருந்து மீட்கப்பட்ட இந்த வெடிகுண்டு பின்னர் செயலிழக்கச் செய்யப்பட்டது.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top